சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை: அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்!!!
சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, கரங்காவட்டையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 68 ஏக்கர் காணியில், பெரும்பான்மை சகோதரர்கள் வேளாண்மை செய்ய மேற்கொண்டிருந்த ஆரம்ப முயற்சி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலையீட்டினையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் காணி தொடர்பான உரிமங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, முஸ்லிம்களுக்கு வேளாண்மை செய்ய அனுமதி வழங்கப்படுமெனவும் அம்பாறை அரசாங்க அதிபர் டீ.எம்.ஐ.பண்டாரநாயக்க, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல் தெரிவித்தார். “முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்தக் காணியில், பெரும்பான்மை இன சகோதரர்கள் நெல் பயிரிடுவதற்காக…
