Headlines

இரணை இலுப்பைக்குளம் வட்டார மக்களை சந்தித்த மாந்தை மேற்கு தவிசாளர்!




மன்னார், இரணை இலுப்பைக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் (குலம்) ஐயாவின் அழைப்பின் பேரில், அங்கு சென்ற மாந்தை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு  மற்றும்  உறுப்பினர் நந்தன் ஆகியோர் அவ் வட்டார மக்களுடன் கலந்துரையாடினார்கள்.

அத்துடன், அவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்தி குழுக்களின் நிர்வாகத்தினரை சந்தித்துப் பேசினர். பின்னர் பரசன்குளம், சின்னவலையன்கட்டு பகுதிக்கு சென்று அங்கு மழை மற்றும் காற்றால் சேதமாகிய வீடுகளை பார்வையிட்டனர். அத்துடன், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்கள்.

வரலாற்றில் பிரதேச சபை தவிசாளர் ஒருவர் இவ்வாறு தங்கள் வீடுகளை பார்வையிடுவது இதுவே முதல் தடவை என அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(ஐ)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *