Headlines

விஷேட தேவையுடையோருக்கான ஆடை உற்பத்தி நிலையத் திறப்பு விழா!

செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை (29) வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர்…

Read More

முசலி வேப்பங்குள வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேசபை உறுப்பினருமான எஸ்.எம்.பைரூஸின் முயற்சியினால், முசலி, வேப்பங்குளம் கிராமத்தின் உள்ளக வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது. (ஐ)      

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு! அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு ஹம்சா வித்தியாலயத்தில் நேற்று மாலை (30) இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,  மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ஸி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.    

Read More

களுவாஞ்சிக்குடியில் ஓடாவி வேலை செய்பவர்களுக்கு உபகரணம் வழங்கி வைப்பு!

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தொழில்சார் ஊக்குவிப்பு பொருட்கள் செயலகத்தில் (28) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஊக்குவிப்பு பொருட்களை வழங்கி வைத்தார். பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கண்ணன், பிரத்தியேக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்…

Read More

இரணை இலுப்பைக்குளம் வட்டார மக்களை சந்தித்த மாந்தை மேற்கு தவிசாளர்!

மன்னார், இரணை இலுப்பைக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் (குலம்) ஐயாவின் அழைப்பின் பேரில், அங்கு சென்ற மாந்தை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு  மற்றும்  உறுப்பினர் நந்தன் ஆகியோர் அவ் வட்டார மக்களுடன் கலந்துரையாடினார்கள். அத்துடன், அவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்தி குழுக்களின் நிர்வாகத்தினரை சந்தித்துப் பேசினர். பின்னர் பரசன்குளம், சின்னவலையன்கட்டு பகுதிக்கு சென்று அங்கு மழை மற்றும் காற்றால் சேதமாகிய வீடுகளை பார்வையிட்டனர். அத்துடன், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகவும்…

Read More

‘நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது’ அமைச்சா் ரிஷாட், ஐ.ம.கூ. தலைவா் ஹசன்அலி வலியுறுத்தல்!

-ஊடகப்பிரிவு- நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன்அலியும் நிந்தவூரிலேயே மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகம்…

Read More