Headlines

காத்தான்குடி மீனவர்களைச் சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்!





காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் நேற்று  (13) இடம்பெற்றது.

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீனவர்களின் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது ஷாதுலியா மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.அப்துல் றஸ்ஸாக், செயலாளர் முஹம்மது பாறூக், ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட மீனவர் சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொண்ட பிரதியமைச்சர், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாக வாக்குறுதியளித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *