Headlines

மக்கள் காங்கிரஸின் அக்குரணை மத்திய குழுக் கூட்டம்!




-எப்.சனூன்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரணை மத்திய குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (11) இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் அக்குரணை கிளைத் தலைவர் இல்யாஸ் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும்  மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, அக்குரணை மற்றும் கண்டி மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் முன்னெடுக்கவுள்ள அபிவிருத்திப் பணிகள் பற்றியும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *