Headlines

தம்பிடிய, நிதுல்லகஹபிடிய வீதியோர மின்விளக்குகள் திருத்தியமைப்பு!

-றிம்சி ஜலீல்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களான ரஸ்லான் ரஸீன், அப்துல் ஹமீத் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மிகநீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாமல் இருந்த தம்பிடிய, நிதுல்லகஹபிடிய கிராமத்தின் வீதியோர மின்விளக்குகள், மக்கள் காங்கிரஸின் குளியாப்பிட்டிய பிரதேச சபையின் உபதவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் நேற்று (12) திருத்தியமைக்கப்பட்டது.  

Read More

மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்புக்கான கூட்டம்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட மகளிர் அமைப்பின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கூட்டம் நேற்று மாலை (12)  இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸின் தலைமையில், கொழும்பு மாவட்ட கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மகளிர் கலந்துகொண்டனர். பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,…

Read More

மக்கள் காங்கிரஸின் அக்குரணை மத்திய குழுக் கூட்டம்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரணை மத்திய குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (11) இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் அக்குரணை கிளைத் தலைவர் இல்யாஸ் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும்  மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது, அக்குரணை மற்றும் கண்டி மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும்…

Read More