Headlines

பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் வேண்டுகோளின் பேரில் மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு! 





-சாஜித்-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் முயற்சியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன.

“மாவடிப்பள்ளி பொதுநூலகம் சில காலமாக பற்றைக்காடுடன், தூசுகள் படிந்து சீரின்மையாகக் காட்சியளித்தது. இதனைப் பார்வையிட்ட உறுப்பினர் ஜலீல், எதிர்வரும் றமழானுக்கு முன்பு இதனை  சுத்தம் செய்ய வேண்டுமென்ற நோக்குடன், மாவடிப்பள்ளி SEDO அமைப்புக்கு பரஸ்பர சிரமதான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார்.

இதனை ஏற்ற SEDO அமைப்பு, இன்று மாவடிப்பள்ளி பொதுநூலகத்தை அவர்களது அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடனும், உறுப்பினர் ஜலீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளியின் மத்திய குழு உறுப்பினர்களின் பங்களிப்புடனும் சுத்தம் செய்தனர்.

அத்துடன்,  பிரதேச சபை உறுப்பினர் ஜலீலுக்கும், SEDO அமைப்பினருக்கும், மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவுக்கும், நூலகத்தின் சிரமதானப் பணிகளை  மேற்கொண்டு நிறைவேற்றித் தந்தமைக்காக, வாசிகசாலை அபிவிருத்திக் குழு, நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.மேலும், இவ்வாறான திட்டமிட்ட அபிவிருத்திகளை இன்னும் அவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *