பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் வேண்டுகோளின் பேரில் மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!
-சாஜித்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் முயற்சியில், மாவடிப்பள்ளி பொதுநூலகத்தின் சிரமதானப் பணிகள் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன. “மாவடிப்பள்ளி பொதுநூலகம் சில காலமாக பற்றைக்காடுடன், தூசுகள் படிந்து சீரின்மையாகக் காட்சியளித்தது. இதனைப் பார்வையிட்ட உறுப்பினர் ஜலீல், எதிர்வரும் றமழானுக்கு முன்பு இதனை சுத்தம் செய்ய வேண்டுமென்ற நோக்குடன், மாவடிப்பள்ளி SEDO அமைப்புக்கு பரஸ்பர சிரமதான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். இதனை ஏற்ற SEDO…
