Headlines

முல்லைத்தீவு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!




-ஊடகப்பிரிவு-

கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்,  முல்லைத்தீவு, பேராறு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீனினால் இந்த தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *