Headlines

“பிரதேச சபைகளின் முக்கியத்துவங்களை மக்கள் உணரவேண்டும்” தவிசாளர் தாஹிர்!

 -முர்ஷிட்-   ஒரு சிசு கருவுற்று, அது பிறந்து வாழ்ந்து மரணிக்கும் வரை மக்களின் அன்றாட செயற்பாடுகளோடு ஒன்றித்து செயலாற்றுகின்ற ஒரு நிறுவனமே பிரதேச சபையாகும். இதை சிங்கள பிரதேசங்களில் வாழும் மக்கள் நன்கு உணர்ந்து செயல்படுகின்றனர் ஆனால் நமது பிரதேச மக்கள், பிரதேச சபைகளின் முக்கியத்துவங்களையும் தேவைப்பாடுகளையும் உணர்வதில்லை இதனால் சபைகளை விட்டும் மக்கள் தூர நிற்கிறார்கள் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் அல் / ஹிதாயா பாலர் பாடசாலையின்…

Read More

“வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- வடமேல் மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி,  இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வடமேல் மாகாண முதலமைச்சரும்,கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார். முதலமைச்சருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில்,  இன்று வியாழக்கிழமை (05) கைத்தொழில் வர்த்தக  அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை…

Read More

முல்லைத்தீவு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்,  முல்லைத்தீவு, பேராறு பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீனினால் இந்த தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மறிச்சுக்கட்டிக்கான உள்ளக வீதிகள் புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மன்னார் மறிச்சிக்கட்டி கிராமத்தின் உள்ளக வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்பாளரும்,  பிரதேச சபை உறுப்பினருமான முஜாஹிரின் தலைமையில்,  13.3 மில்லியன் ரூபாய் பெறுமதியில்,  உள்ளக வீதிகளுக்கான தார் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.      

Read More