Headlines

நமது சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அக்கிரமங்களை தடுக்க, அனைவரும் மக்கள் காங்கிரஸின் கீழ் இணைய வேண்டும்” டாக்டர்.ஹஸ்மியா!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டங்கள் குருநாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்திசத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசியத் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை ஊடாக, அப்பிரதேச வேட்பாளர்கள் மற்றும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரின் ஒத்துழைப்போடு  இடம்பெற்றது.

இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய டாக்டர். ஹஸ்மியா கூறியதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதனூடாக நமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும், ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒரே தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். அந்நிய சமுதாயத்தினரால் எமது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அக்கிரமங்களை தடுத்து நிறுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒரு கட்சியின் கீழ் இணைய வேண்டும். அந்தவகையில், சமூகக் கட்சியான மக்கள் காங்கிரஸின் கீழ்  நாம் அனைவரும் ஓரணியாக இணைவதன் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

நமது  சமூகத்தின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் போராடுவதனாலேயே இன்று எமது கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இனவாதி என்று முத்திரையிட்டு, அவரின் குரலை அடக்கிஒடுக்கப் பார்க்கின்றனர். எமது சமூகம் எதிர்வரும் காலங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, நாம் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.  இந்த நாட்டில் நமது சமூகம் எதிர்நோக்கும்  பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய, எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய ஒரேயொரு தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டுமே.

எனவே, உங்கள் பொன்னான வாக்குகளை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்துக்கு வழங்கி, மக்கள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *