Headlines

ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும்




பேலியகொடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தினால் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மூன்று பிரதான பாதைகளில் ஒரு பதையில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

இன்று (8) காலை கெண்டனர் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அந்த வழியாக சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களும் தாமதாமாகவே புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகையிரத பாதைகளை இன்று மாலையளவில் சீர் செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *