Headlines

மலையகத்திற்கான ரயில் சேவை இடைநிறுத்தம்

மழை காரணமாக இஹல கோட்டே மற்றும் பலன ஆகிய இடங்களில் ரயில் பாதை (தண்டவாளம்) கீழிறங்கியுள்ளதால் கண்டி மற்றும் ரம்புக்கனே ஆகிய பிரதேசங்களுக்கிடையேயான ரயில் சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. ரயில் பாதை கீழிறங்கியுள்ளதால் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, பதுளை நோக்கிச் செல்லும் புகையிரதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலும் இடைநடுவில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம்…

Read More

காலி – மாத்தறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

காலி மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. உனவட்டுன மற்றும் கட்டுகொட பகுதிகளுக்கு இடையிலான பாலமொன்றில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இம் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

காலி – மாத்தறை ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின.!

ரயில் ஒன்று தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் காலி வக்வெல்ல பகுதியில்  நேற்று (17) trainதடம்புரண்டது. இதனையடுத்து, காலி – மாத்தறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதிக்கான ரயில் சேவை மீண்டும் சீர்செய்யப்பட்டுள்ளது.

Read More

ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும்

பேலியகொடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தினால் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மூன்று பிரதான பாதைகளில் ஒரு பதையில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார். இன்று (8) காலை கெண்டனர் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களும் தாமதாமாகவே புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

ரயில் சேவைகள் பாதிப்பு.!

வனவாசல பகுதியில் நேற்றிரவு (7) கெண்டனர் வாகனம்  ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை திருத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More