Headlines

புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு

தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாகஇலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச் சீட்டுகளை வழங்கவும், மற்றைய இயந்திரம் பயணிகள் தாமாகவே பணத்தினைசெலுத்தி அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்….

Read More

கொழும்பு – கண்டி நகரங்களுக்கு இடையில் விசேட புகையிரத சேவை

இந்த வாரத்தின் இறுதியில் கொழும்பில் இருந்து கண்டிக்கு இரண்டு விசேட புகையிரத சேவைகள் நடைபெறும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை போயாதினம் என்பதால் அன்றைய தினம் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனையடுத்தே குறித்த புகையிரத சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளைய தினம் மாலை 5.20இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து கண்டியை நோக்கி விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் நாளை மறுதினம் காலை 5.50 மணியளவில் கண்டியிலிருந்து…

Read More

பதுளை – கொழும்பு ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயில், கொட்டகலை – ஹட்டன் ஆகிய புகையிரத நிலையத்திற்கிடையில் 110 என்ற கட்டைப்பகுதியில் நேற்று 1.45 மணியளவில் தடம்புரண்டுள்ளது. தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

Read More

மாத்தறை – கதிர்காமம் புகையிரத நிர்மாணப் பணிகள் விரைவில் பூர்த்தி

மாத்தறை – கதிர்காமம் புகையிரத நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் பயணிகளுக்கான சிறந்த போக்குவரத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த புகையிரத பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் இந்த புகையிர போக்குவரத்து அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த புகையிர போக்குவரத்து மாத்தறையில் இருந்து…

Read More

தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில்

கொழும்பு – புத்தளம் வீதியில் நீர்கொழும்பு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று இன்று காலையில் தண்டவாளத்தை விட்டு விலகியதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

சம்பள அதிகரிப்பை கோரும் புகையிரத தொழிற்சங்கம்

சம்பளத்துடன் இணைத்து மேலும் பல கொடுப்பனவுகளை புகையிரத தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இதேவேளை 10,000 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம் இதுவரை வழங்க முன்வராமை குறித்து புகையிரத தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தமது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் தமது சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என புகையிரத தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளரான ஜானக பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கொடுப்பனவுகள் அதிகரிப்பை அமைச்சரவை அங்கீகரித்துள்ள போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளதாகவும்…

Read More

தடைப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த அனைத்து ரயில் சேவைகளும் தற்போது சீரான நிலைமைக்கு திரும்பியுள்ளதாக, ரயில்வே போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். தபுத்கேம பிரதேசத்தைச்சேர்ந்த அனுராதபுர ரயில் மார்க்கமானது நேற்று பெய்த மழையினால் நீரில் மூழ்கியது இதனால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. இதேவேளை, மலையக ரயில் மார்க்கத்தில் சில இடங்கள் கீழ் இறங்கி காணப்பட்ட போதிலும் அதனை சீராக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர் தெரிவித்தார்.

Read More

மலையகத்திற்கான ரயில் சேவை இடைநிறுத்தம்

மழை காரணமாக இஹல கோட்டே மற்றும் பலன ஆகிய இடங்களில் ரயில் பாதை (தண்டவாளம்) கீழிறங்கியுள்ளதால் கண்டி மற்றும் ரம்புக்கனே ஆகிய பிரதேசங்களுக்கிடையேயான ரயில் சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. ரயில் பாதை கீழிறங்கியுள்ளதால் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, பதுளை நோக்கிச் செல்லும் புகையிரதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலும் இடைநடுவில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம்…

Read More

புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து காரணமாக, புத்தளம் – கொழும்பு ரயில் சேவைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கொழும்பு – புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

டிக்கெட் இன்றிப் பயணித்தால், ரூ.3,000 தண்டம்

– வி.நிரோஷினி – ரயில்களில் பயணச்சீட்டுகள் (டிக்கெட்) இன்றிப் பயணித்தால், 3ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும். அதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரயில்களில் பயணஞ் செய்யும்  பயணிகளின் பயணச்சீட்டுகளுக்காக, சலுகை அடிப்படையிலான கட்டணங்கள் அறவிடப்படினும், அவர்கள் அதனையும் செலுத்தத் தவறுகின்றனர். இன்னுஞ்சிலர், தாம் பயணிக்கும் வகுப்புகளை விடவும், கட்டணங்கள் கூடிய…

Read More

ரயில் மோதி மூவர் பலி!

வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று (11) காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More