Headlines

அரசியல் வேண்டாம், பௌத்த பிக்குவாக இருந்தால் போதும்! ஞானசார தேரர்




எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும்  ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுபல சேனா அமைப்பும்  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தாம் ஒரு  பௌத்த பிக்கு என குறிப்பிட்ட அவர் இனியும் தமக்கு  அரசியல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

எனினும் பொதுபலஜன பெரமுன அமைப்பு தமது கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஞானசார தேரர், பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு படு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *