Headlines

கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி எதுவும் தெரியாது: மஹிந்த




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் 9 கட்சிகள் இணையவுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியை ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைப்பது தொடர்பில் எந்தவொரு நபரும் தன்னுடன் இதுவரை பேசவோ அல்லது அபிப்பிராயங்களோ கேட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள மஹிந்த,

வேலையற்ற ஒரு சிலர் இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *