Headlines

இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று மாலை நான்கு மணி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதி, பண்டாரநாயக்க சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை ,…

Read More

சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது

இந்­தி­யா­வுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது, அதற்குப் பதி­லாக வர்த்தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படவுள்­ள­தாக அர­சாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்­பாக சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­விக்கையில், இந்­தி­யா­வுடன் சீபா உடன்­ப­டிக்கை கைச்சாத்திடப்படப்  போவ­தா­கவும் இதனால் இலங்கையை இந்­தியா ஆக்­கி­ர­மித்­து­விடும் என்றும் பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. இதில் உண்­மை­யெ­து­வு­மில்லை. இது தொடர்­பாக பிர­தமர் ரணில்­ விக்­கி­ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெளி­வான அறிக்­கை­யொன்றை விடுத்தார்.தனது இந்­திய விஜ­யத்தின் போது சீபா உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேசப்­ப­ட­வில்லை. அவ் உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படாது என்றும் தெரி­வித்தார். தேசப்­பற்று தொடர்­பாக பேசும்…

Read More

எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் மட்டுமே.. நிலக லங்கார தேரர்

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் –   யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்றப்பட்ட பின்னரும்  எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மட்டுமே. எங்களின் இன்ப துன்பங்களிலும் அவர் பங்கேற்பவர் என ஸ்ரீ பன்வௌ விகாராதிபதி நிலக லங்கார தேரர் தெரிவித்தார். வெலி ஓயா பிரதேசத்தின் பல்வேறு  கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) அமைச்சர் றிஷாட் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டு அந்த பிரதேச மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஸ்ரீ பன்வௌ பகுதியில் இடம்பெற்ற கூட்ட மொன்றில்; உரையாற்றிய…

Read More

நபிகள் நாயகத்தின் கொள்கைகள் மட்டுமே இந்த உலக அமைதிக்கு ஒரேயொரு தீர்வு

நோபல் பரிசு பெற்றவரும் , திபெத்திய ஆன்மீக் தலைவருமான தலாய்லாமா அவர்கள்.கூறும் போது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் வழிகாட்டக் கூடிய இறைவனால் கொடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்றால் அது அல்-குர்ஆன் என்று வர்ணித்தித்துள்ளார். மேலும், இந்த மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவை செய்த ஆன்மீக தலைவர் என்றால்  அது நபிகள் நாயகன் மட்டும் தான் அவரின்  வாழ்க்கை இந்த மனிதகுலத்திற்கு சிறந்த  உதாரணமாகும். இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்டவும் பயங்கரவாதம் மற்றும் கொடுங்கோன்மையை முடிவுக்கு கொண்டுவரவும் நபிகள் நாயகம்…

Read More

கொலன்னாவை நகர சபை தலைவர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலன்னாவை நகர சபை தலைவர் பத்ம உதய சாந்தவை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பைமலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கட்சிகளின் ஒன்றிணைவு பற்றி எதுவும் தெரியாது: மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் 9 கட்சிகள் இணையவுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியை ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைப்பது தொடர்பில் எந்தவொரு நபரும் தன்னுடன் இதுவரை பேசவோ அல்லது அபிப்பிராயங்களோ கேட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள மஹிந்த, வேலையற்ற ஒரு சிலர் இவ்வாறான கதைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More

பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில்  இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல்  2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

புதிய கட்­சியை உரு­வாக்­கு­வதில் மும்­முரம் காட்டும் மஹிந்த அணி

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் தனித்து கள­மி­றங்கும் நோக்கில் மஹிந்த அணி­யா­னது புதிய அர­சியல் கட்­சியை உரு­வாக்கும் பணி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்கள் கடந்த வாரமும் இடம்­பெற்­ற­தா­கவும் நாளை செவ்­வாய்க்­கி­ழ­மையும் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அர­சியல் கட்­சிகள் மற்றும் அர­சியல் குழுக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதே­வேளை கடந்த வாரம் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ…

Read More

நிசங்க சேனாதிபதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

Read More

ஏ.ஸ்.பி. யின் மனைவியின் காருடன் மோதிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி செலுத்தி வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளான  சம்பவம் நேற்று கொழும்பு பிலிப் குணவர்தன பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு ஆதரவு வழங்குவதற்காக காரில் சென்ற பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியின் வாகனத்திலேயே, 100கிலோ மீற்றர் வேகத்தில் வந்த பொலிஸ் அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. குறித்தப் பெண் தனது வாகனத்தை நிறுத்தி வைப்பதற்காக சினமன்…

Read More

உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமரா

ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமிராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிரும் சுழலக்கூடிய இந்த கேமிரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-பை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமிராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக…

Read More

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இறுதி நாள்

விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் நேதாஜியின் பயணம் பற்றிய ரகசிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை…

Read More