Headlines

கம்பஹா முக்கொலை : சந்தேக நபர் கைது




கம்பஹா – உடுகம்பொல, தெவலபொல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆம் திகதி குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலம் மீட்கப்பட்டதுடன் சிறுமியின் சடலம் வீட்டிற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பசியாலை பிரதேசத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்தனர்.

பொலிஸார் தொடர்ந்தும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *