“மக்கள் காங்கிரஸ் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும் என மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரான அப்துல்லாஹ் மஹ்ரூப், நேற்று முன்தினம் (09) கந்தளாயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எமது உரிமைகளைப் பாதுகாத்து, வென்றெடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமனறம் அனுப்ப…
