Headlines

“சமூகப் பிரச்சினைகளை தீர்க்க வக்கில்லாது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்” – சம்மாந்துறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தலில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்  மாஹிரை ஆதரித்து, சம்மாந்துறையில் (19) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ரிஷாட், “கடந்த பொதுத்…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்  பதியுதீனை ஆளுந்தரப்பு நெருக்குதலுக்குள்ளாக்குவது வேதனையளிக்கிறது” – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இந்தத் தேர்தல் காலத்தில் அடிக்கடி விசாரணைகளுக்கு  அழைப்பது மற்றும் கைது செய்ய முனைவது போன்ற நெருக்குதல்களை ஆளுந்தரப்பிலிருந்து  மேற்கொள்வதானது, பெரும் மனவேதனை அளிப்பதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தொகுதி அமைப்பாளருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (20) கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களை பெறுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் இடம்பெறும் போது,…

Read More

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தாலிப் அலி தெரிவு!

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எச்.தாலிப் அலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், இன்று (20) தம்பலகாமம் பிரதேச சபையின் சபா  மண்டபத்தில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவின் போது, சக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஏகமானதாக தாலிப் அலி தெரிவானார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உப தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்மொழிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்…

Read More

காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி, காத்தான்குடி, கர்பலா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்களை ஆதரித்து இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது, மு.கா ஆதரவாளர்கள் சிலர் மக்கள் காங்கிரஸில்  இணைந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் நகர சபை உறுப்பினர் முகைதீன் சாலி, முன்னாள் நகர சபை உறுப்பினர் மாஹிர், மத்திய குழு செயலாளர்…

Read More

“மொட்டுக் கட்சியில் கோடாரிக் காம்புகள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்” – முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கி வாக்குகளுக்காக தேர்தல் காலங்களில் செயற்படுகிறார்கள். இதன் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முயற்சிக்கிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை  வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப்  தெரிவித்தார். கிண்ணியா, மாஞ்சோலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை கொரோனா என்ற போர்வையில் எரித்தார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் சொல்கின்ற போதும்,…

Read More

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன’ – வஃபா பாறுக்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான கெடுபிடிகள் எல்லை தாண்டி செல்கின்றன. தேர்தல் ஆணையகத்தின் பரிந்துரையை குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பழி வாங்குவதிலேயே அதிகார வெறியர்கள் கரிசனை காட்டுகின்றார்கள். சிறையில் அடைப்பதால் ஏற்படவிருக்கும் லாப நட்ட கணக்கில் தெளிவின்மையால், இன்னும் கைது செய்யாமல் விசாரனை என்ற பெயரில் பாரிய உளவியல் தொல்லைக்குள்ளாக்குகின்றார்கள். ரிஷாட் பதியுதீனை கைது செய்வதால், சில ஆயிரம் இனவாத வாக்குகளை அதிகரித்துக்கொள்ளலாம் என நிச்சயமானால், அவரை…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான விசாரணையினை ஆகஸ்ட் 10 இன் பின்னர் மேற்கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் கையெழுத்திட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணையினை பிற்போடுமாறும் அல்லது 10. 08. 2020 இன் பின்னர் மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இருவரும் இணைந்து, கையொப்பமிட்டு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர். இம்மாதம் ஜூலை 15 ஆம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் மீது ஆணைக்குழு எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தினை…

Read More

தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு மாற்றமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நாளை ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட்டுக்கு அழைப்பாணை..!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மீண்டும் நாளைக் காலை (20) 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தேர்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைப்பதை, தேர்தல் முடியும் வரை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையிலும், அதற்கு மாற்றமாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி இன்ஷாப் அஹமட்…

Read More

“சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது”- எருக்கலம்பிட்டியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருப்பதால், பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழுந்து, வாக்குகளை நாசமாக்கி விட வேண்டாமென மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் நேற்று மாலை (18) இடம்பெற்ற தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “சிறுபான்மைத் தலைமைகளை பாதுகாக்கும் தேவை இப்போதைய காலகட்டத்தில் இருக்கின்றது. அடுத்த பாராளுமன்றுக்கு பேசாமடந்தைகளும் பொம்மைகளுமே…

Read More

“சரணாகதி அரசியலுக்கு அடிபணியோம்” – வஃபா பாறுக்!

கொழும்பில் வர்த்தக சங்கமொன்றுக்கு தலைவராகுவதும், சிறந்த வர்த்தகருக்கான ஜனாதிபதி விருதை பெறுவதும் அவ்வளவு இலேசான விடையங்களல்ல. அரச நிறுவனங்களுடன் இருக்கும் வர்த்தக ரீதியான தொடர்பு சாதாரணமானது. தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன், அரசின் உச்ச அதிகாரங்களை அணுகுவார்கள். அவர்கள் அமைச்சர்களாகவும், அமைச்சின் செயலாளர்களாகவும், அதைவிட அதிகாரம் கூடியோராகவும் இருக்கலாம். தனியார் வர்த்தகத்தை மேம்படுத்துமுகமாக, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் அமைச்சர்கள், செயலாளர்கள் உதவுவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நாம் உதவி செய்வோர், எந்தக் நிமிடம் தற்கொலை…

Read More

எமது மக்கள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதற்கு பதிலாக. இன்று அவர்கள் எம்மை தாக்குகின்றனர்”- வேட்பாளர் அலி சப்ரி!

புத்தளம் மாவட்ட, சிறுபான்மை சமூகம் இழந்துள்ள பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக, தராசுச் சின்னத்தில் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுவதாக தெரிவித்த வேட்பாளர் அலி சப்ரி ரஹீம், கடந்த காலங்களில் எமது மக்கள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாராளுமன்றம் அனுப்பியதற்கு பதிலாக இன்று எம்மை அவர்கள் தாக்குகின்றனர் என்றும் கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசுக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் அலி சப்ரியை ஆதரித்து, புத்தளம், நுஹ்மான் மண்டபத்தில் நேற்று மாலை (17 ) இடம்பெற்ற இளைஞர்…

Read More

சில்லறை சலுகைகளுக்கு சிறுபான்மை சமூகம் சோரம் போகாது..!

நமது மண் மனம் திறக்கிறது…   எதிர்வரும் தேர்தல் எதிர்பார்ப்புக்களை வெல்வதற்காக எமக்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சலுகைகளுக்கு சோரம் போகாத சமூகமான தமிழர்களை சில்லறை விலைகளுக்கு வாங்கிட, எமது மண்ணில் சிலர் களமிறங்கியுள்ளனர். காட்டிக்கொடுக்கப்பட்டதால் நாமடைந்த நெருக்குவாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக எமது மண் மீளவில்லை. இவ்வாறு எம்மை நெருக்கும், நெருடும் அதிகார சக்திகளை இன்னும் பலப்படுத்தவே, இந்தச் சிலர் எமது மண்ணில் ஊடுருவியுள்ளனர்.   நமது பலவீனங்களைப் பலப்படுத்தி தமிழர், முஸ்லிம்கள்…

Read More