“நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்!
நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டுமென்றும் சிறுபான்மை மக்கள் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை (14) இடம்பெற்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்…
