Headlines

“மின்சாரம், குடிநீர் கட்டணங்களை இரத்துச்செய்யுங்கள்” – ஜனாதிபதி, பிரதமரிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மக்களின் பளுவைக் குறைக்கும் வகையில், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை, 2020 மார்ச் மாதம் தொடக்கம் எதிர்வரும் 06 மாதங்களுக்கு அறவிடாது இருக்கும் வகையில், அதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக, எமது நட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும், சவால்களையும்…

Read More

“நீர், மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் வேண்டுகோள்!

நீர், மின்சார துண்டிப்பை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமெனவும் என்றும் கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோணா தொடர்பான விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அன்றாடத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள்,  நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உரிய காலப்பகுதியில் செலுத்தமுடியாத நிலையில் உள்ளனர். இக்காலப்பகுதியை மக்கள் வீட்டிலேயே கழிப்பதால் அதிக நீர்ப்பாவனை, மின்சார பாவனை காரணமாக…

Read More

தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் மன்னாரில் கொரோணா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிரின் தலைமையில், கொரோணா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மன்னாரில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டன. கொரோணா வைரஸின் தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில், ரமணன் (Technical Officer )  தலைமையில், தவிசாளர் முஜாஹிரின் பங்களிப்பில், மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களிலும், சன நெரிசல் மிக்க பகுதிகளிலும் கொரோணா வைரஸின் தாக்கம்…

Read More

“ஆட்கொல்லி கொரோணாவை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்” – முன்னாள் எம்.பி இஷாக் ரஹுமான்!

இலங்கையர் என்ற ரீதியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆட்கொல்லி கொரோணா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அநுராதபுர மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். கொவிட் – 19 வைரஸ் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தால் கொரோணா வைரஸை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மாத்திரம் இந்த நோயை முற்றாக அழித்து விட முடியாது. நாட்டு மக்களும் இத‌ற்கான பங்களிப்பை வழங்க வேண்டும்….

Read More

“நாளாந்தக் கூலித்தொழிலாளருக்கு நிவாரணம் வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” – கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணாமாக, ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதனால், நாளாந்தத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் உழைப்புக்கு வழியின்றி முடங்கி இருப்பதனால், அவர்களுக்கு உலர் உணவு நிவாரணங்களை வழங்க, அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சித் தலைவர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை (24) அலரிமாளிகையில், கொரோணா அனர்த்தம் தொடர்பாக ஆராயும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற…

Read More

மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு!

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், திருமலை மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க ஆகியோரை இன்று காலை (23)  சந்தித்துக் கலந்துரையாடினார்.  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த அவர், வருமானம் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட உணவுத் தேவைக்காக உலர் உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை…

Read More

ஓட்டமாவடியில் கொரோணா பீதி: வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தவிசாளர் அஸ்மி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில், நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார் என்று வெளிவந்துள்ள செய்தியில், எவ்வித உண்மையும் இல்லை என்று, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஓட்டமாவடி வர்த்தக நிலைய கடைத்தொகுதி ஒன்றில், வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டு, அவரை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் பொலிசாரினால் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவர் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்….

Read More

மயில் சின்னத்தில் அம்பாரையில் தனித்து களமிறங்கும் மக்கள் காங்கிரஸ்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாரை மாவட்டத்தில், மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அம்பாரை மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பொருட்டு, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் (அப்துல் ரஸாக்) ஆகியோர், இன்று (19) அதிகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டனர். வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், ஏற்கனவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அந்தவகையில், சட்ட முதுமாணி வை.எல்.எஸ்….

Read More

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், வன்னியில் போட்டியிடவுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (19) வேட்புமனுவைக் கையளித்தார். சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் (சமகி ஜன பலவேகய), தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார்.

Read More

மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும் 06 மாவட்டங்களில் இணைந்தும் களத்தில்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் இணைந்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதுடன், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும் ஒட்டுமொத்தமாக 07 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள்…

Read More

புத்தளம் நகரசபை உறுப்பினர் அலி சப்ரியின் முயற்சியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவையுடைய மாணவர்களுக்கு, புத்தளம் மாவட்டத்தின் எலவங்குளம் ரால்மடு பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Read More

ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடலொன்று, கட்சியின் தவிசாளர் அமீர் அலியின் தலைமையில்  இடம்பெற்றது. தவிசாளர் அமீர் அலியின் இல்லத்தில் (14) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்த வேலைத் திட்டங்கள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கல்விமான்கள், மௌலவிமார், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More