Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்  யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள் திறந்து வைப்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையங்கள், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. குடும்பங்களின் வருமானங்களை உயர்த்தவும்,  தலைமைத்துவ பண்புடைய வருமானம் பெறக்கூடிய பெண் சமூகத்தை உருவாக்குவதாற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இந்த தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தாழ்வுபாடு, தாராபுரம், தோட்டவெளி, புதுக்குடியிருப்பு, கரிசல், காட்டாஸ்பத்திரி, பேசாலை, தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் இந்த தையல்…

Read More

பம்மன்னயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும்!

குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பல தேர்தல் தொகுதி பம்மன்ன அகார கொலனி மக்கள் சந்திப்பும் கட்சியின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான நஸீர் தலைமையில், பம்மன்ன அகார பள்ளி மக்தப் கட்டிடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, வட்டாரக் கிளை அமைக்கப்பட்டதுடன், கிராமத்தின் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஊர் மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பம்மன கிளை சங்கத் தலைவர் நஸ்மிரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால்  இறக்காமம் பிரதேச அபிவிருத்திக்கு 05 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளரும், இறக்காமம் மத்திய குழு தலைவருமான ஏ.எல்.நெளபரின் வேண்டுகோளுக்கிணங்க 05 மில்லியன் ரூபா நிதி இறக்காமம் பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஊடாக இறக்காமம் பிரதேசத்தில் புணரமைக்கப்பட வேண்டிய வீதிகள் உள்ளிட்ட இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மக்கள் காங்கிரஸ் இறக்காமம் மக்கள் பணிமனை திறப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச மக்கள் பணிமனை மக்களுக்காக சேவை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுவரை காலமும் இறக்காமம் பிரதேச மக்கள் தங்களது சேவையை பெற்றுக்கொள்ள சிரமப்பட்டனர். தற்பொழுது இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக அ.இ.ம.கா இறக்காமம் பிரதேச சபை உப தவிசாளரும்,இறக்காமம் மத்திய குழு தலைவருமான A.L.நெளபர் மெளலவி மக்கள் பணிமனையை திறந்து வைத்துள்ளார். மக்கள் தங்கள் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும், சேவைகளை பெற்றுக்கொள்ளவும் சனி, ஞாயிறு தினங்களில் காலை முதல்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: உடனடியாக விசாரித்து உண்மை நிலையைக் கண்டறியுமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் கோரிக்கை!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவர் தனித்தனியாக எழுதியுள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமைச்சர் ரிஷாட்…

Read More

“எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி சேவையாற்றுகின்றோம்” முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு!

‘’செமட்ட செவன’’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தாழ்வுபாட்டில் நிர்மாணிக்கப்பட்ட வளனார்புரம் வீட்டுத்திட்டம் (07-10-2018) சென்ற ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விலே முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும்,அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் முஹம்மது பஸ்மி, மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர், மன்னார் மாவட்ட செயலாளர் சீ.ஏமோகன்ராஜ், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்,…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மாந்தை மேற்கில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்  மற்றும்  வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மாந்தை பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நேற்று (10) ஆரம்பிக்கப்பட்டது.  ஆண்டான்குளம் ஆயிசா மஸ்ஜித், சொர்ணபுரி முகைதீன் ஜும்மா பள்ளி, மினுக்கன் அன்னூர் ஜும்மா மஸ்ஜித், வட்டக்கண்டல் முகைதீன் ஜும்மா பள்ளி, கட்டைக்காடு முஹைதீன் ஜும்மா பள்ளி  மற்றும் பள்ளிவாசல்பிட்டி  பாடசாலைக்கான சுற்று மதில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மாந்தை பிரதேச இணைப்பாளர் சனூஸின்…

Read More

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று மாலை (10) குவைத் வாழ் இலங்கை சமூகத்தை சந்தித்தபோதே இத்தகவலை வெளியிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குவைத் கிளை ஏற்பாட்டில், குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தம்பலகாமம் பிரதேசத்தில் ஆரம்பம்!

47 வது, 48 வது, 49 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், தம்பலகாமம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான தாலிப் ஹாஜியார், ரெஜீன், வட்டாரக் குழுத் தலைவர் ஆபிலூன், ரபீக் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது….

Read More

பாணகமுவ பெரிய பள்ளி மக்தப் கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு நிதியினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு!

மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம். நஸீரின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கடந்த சில வருடங்களாக குருநாகல் மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹரின் வேண்டுகோளுக்கிணங்க பாணகமுவ கிராமத்துக்கான பெரிய பள்ளி மக்தப் கட்டிட கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடத்துக்கு அமைச்சின் நிதியிலிருந்து 20,000,00.00 ரூபாய் நிதியினை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கடந்த…

Read More

“முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் சமூகத்தின் மீதும் தங்கள் பணிகளின் மீதும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்”- தவிசாளர் தாஹிர்!

அதிகமாக முச்சக்கர வண்டிகளை பயணத்திற்காக நமது பெண்களே பயன்படுத்துகின்றனர் அந்தவகையில் நமது பெண் பிள்ளைகளை பாடசாலைகளைக்கும் மாலை நேர வகுப்புக்களுக்கும் முச்சக்கர வண்டிகளில் உங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பெற்றோர்கள் அனுப்புகின்றனர், அந்தவகையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களாக தங்களின் பிள்ளைகள் போல பொறுப்புணர்வுடன் நடாத்துவது ஒவ்வொரு சாரதியின் மீதும் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். எம்.எம். தாஜூடீன் அவர்களின் தலைமையில் இன்று(7) நடைபெற்ற நிந்தவூர்…

Read More

ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் பரிசளிப்பு விழா!

புத்தளம், வேப்பங்குளம் 04 ஆம் கட்டையில் இடம்பெற்ற, ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் இறுதிப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அந்-நூர் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். தௌபீக் மதனியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் உள்ளிட்ட…

Read More