Headlines

‘உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின்{China National Agriculture Wholesale Market Association (CAWA)} தலைவர் ஷின்ஜுன் மா  (Zengjun Ma) தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, நேற்று முன்தினம் (15)…

Read More

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்” – ஜனாதிபதி, பிரதமரிடம் தவிசாளர் தாஹிர் கோரிக்கை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டு வரும் அமைச்சர் ரிஷாட் படுகொலை தொடர்பான செய்தியானது, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அச்சத்தை…

Read More

மாகாண சபை தேர்தலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்! “தாமதிக்கப்படும் தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்”

எல்லோராலும் எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல், எதிர்வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் கூட நடைபெறுமா? என்ற சந்தேக சாத்தியங்கள் தென்படுவதாக கடந்த 11.10.2018 தேர்தல்கள் கமிஷன் தலைமையகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்ட கருத்துக்கள், மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை மீறும் செயலாக கணிக்கப்படுகின்றது. அங்கு வெளியிடப்பட்ட கருத்தின்படி மாகாண சபைத் தேர்தல் புதிய தொகுதி வாரி தேர்தல் முறையிலா (50:50) அல்லது பழைய விகிதாசார முறையிலா என்பது பற்றி…

Read More

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்! மின்-வணிக நிபுணர்கள் தெரிவிப்பு!

“உலகில் வேகமாக வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா வளர்ந்து வருகிறது. இப்பிராந்தியங்களின் மத்தியில் வர்த்தகத்தினை அதிகரிக்க, உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்நோக்கி செல்வதற்கு சார்க் நாடுகள்  பணியாற்றி வருகின்றன. மேலும், ஆசிய நூற்றாண்டை வடிவமைப்பதற்கு, ஆற்றல் மிகுந்த ஒரு பாரிய பங்களிப்பை சார்க் நாடுகள் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த 20% சதவீதமான வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் பங்கு 05% சதவீதமாக உள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்…

Read More

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை:  அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்!!! 

சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, கரங்காவட்டையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 68 ஏக்கர் காணியில், பெரும்பான்மை சகோதரர்கள் வேளாண்மை செய்ய மேற்கொண்டிருந்த ஆரம்ப முயற்சி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலையீட்டினையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், இந்தக் காணி தொடர்பான உரிமங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, முஸ்லிம்களுக்கு வேளாண்மை செய்ய அனுமதி வழங்கப்படுமெனவும்  அம்பாறை அரசாங்க அதிபர் டீ.எம்.ஐ.பண்டாரநாயக்க, அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்துள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.சஹீல் தெரிவித்தார்.  “முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்தக் காணியில், பெரும்பான்மை இன சகோதரர்கள் நெல் பயிரிடுவதற்காக…

Read More

மக்கள் காங்கிரஸுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வை.எல்.எஸ்.ஹமீத்!!!

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருந்தது. இதற்கு எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் அந்த வழக்கானது மேற்கொண்டு விசாரிக்கப்படுவது அவசியமற்றது எனக்கருதி, வழக்கை வாபஸ் பெறுவதற்கான உரிய அறிவுறுத்தல்களை பெற்றுக்கொண்டு, அதனை…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் மனந்திறந்து பேசுகின்றார்!!!

20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கில் அமைதிச் சூழல் ஏற்பட்டதனால் மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்திற்கு மக்கள் வந்தபோது இந்தப் பிரதேசம் இருந்த நிலைமை, அப்போது வந்த மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். அவர்கள் வாழ்ந்த காணிகள் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தும் கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் தகர்ந்தும், இடிந்தும், உருக்குலைந்தும் கிடந்தன. முசலிப் பிரதேசத்திலுள்ள அத்தனை கிராமங்களும், ஒன்றுடன் ஒன்று காடுகளால் பின்னப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருந்தன. மொத்தத்தில் இந்தப் பிரதேசம் இருளடைந்த பூமியாக…

Read More

புத்தளம் கொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் கிளை நடத்திய உதைபந்தாட்ட போட்டி பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்..

புத்தளம் கொத்தாந்தீவு  மக்கள் காங்கிரஸ் கிளை நடத்திய உதைபந்தாட்ட போட்டியின்இறுதி  நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தார்…. இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி,கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன்  எஹியா மற்றும் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களான ஆசிக்,பைசல்,பெளசான்,அக்மல் ஆகியேரும் கலந்துகொண்டனர்… -ஊடகப்பிரிவு –

Read More

“மீள்குடியேற்ற விஷேட செயலணியில் கை வைத்தால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்” – அமைச்சர் ரிஷாட் எச்சரிக்கை!

மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 500 வீட்டுத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் பயனாளிகளுக்கான அனுமதிக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். முசலி பிரதேச சபை உறுப்பினரும்…

Read More

“இலங்கையுடனான வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்க உறுதியான நடவடிக்கை” குவைத் வர்த்தக அமைச்சர் றவ்டான் அறிவிப்பு!

ஒரு விரிவான திட்டத்தின் ஊடாக உள்நாட்டு பொருளாதாரத்தில் தனியார் துறையினது பங்குபற்றுதலை அதிகரிப்பதனை அடிப்படையாகக் கொண்டு, வருமானத்தினை பெறுகின்ற வளங்களைப் பல்வகைப்படுத்துவதற்கான மிக உறுதியானதும், முக்கியமானதுமான நடவடிக்கைகளை குவைத் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக, குவைத் வர்த்தக அமைச்சர் காலித் அல் றவ்டான் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் குவைத் நாடுகளுக்கிடையிலான வணிக மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கான ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “புதிய குவைத்தின் பார்வை…

Read More

குவைத் –  இலங்கை வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம்: இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவிப்பு!

குவைத் –  இலங்கை கூட்டு அமைச்சர்கள் குழுவின் இரண்டாவது அமர்வு, மிகவும் சாதகமான முடிவுடன் நிறைவடைந்தாக, இலங்கை வர்த்தக திணைக்களம் நேற்று தெரிவித்தது.  இரு நாடுகளுக்கிடையிலான தனியார் துறை மீது பாரிய பங்களிப்பினை ஏற்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னோடியான வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் வர்த்தக திணைக்களம்  மேலும் தெரிவித்தது.  2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9-11 ஆம் திகதிகளில் குவைத்தில் நடைபெற்ற வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான, குவைத் –…

Read More

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாடசாலைகளின் கைகளில் மட்டும் ஒப்படைத்துவிடாது, பெற்றோர்களும் அதிகம் அக்கறைகொள்ள வேண்டும்” தவிசாளர் தாஹிர்!

பெற்றோர்களான நாம் ஒவ்வொருவரும் நமது பிள்ளைகளான அடுத்த அடுத்த தலைமுறைகளின் சிறப்பான எதிர்காலம் குறித்து, அவர்கள் கருவுற்றதிலிருந்து அல்லது அதற்கு முன்னரே அக்கறை கொண்டு திட்டமிட்டு செயற்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். இணைந்த வடகிழக்கின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் அதிபருமான ஐ.எம்.இஸ்சதீன் அவர்களின் தலைமையில், நிந்தவூர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி நேற்று (12) நடாத்திய சர்வதேச சிறுவர் தின விளையாட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More