Headlines

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால், முசலியில் கடல்சார் பல்கலைக்கழகத்துக்கான நடவடிக்கை!

மன்னார் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கை கருத்திற்கெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரிடம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரியங்க பெரேரா, முசலியில் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு…

Read More

நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அம்பாறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத், முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், கிழக்கு மாகாண…

Read More

நிந்தவூர் தெற்கு செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் மாதாந்த கூட்டம்!

செங்கல் உற்பத்தியாளர்களான நீங்கள் நாட்டின் உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளில் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றீர்கள், அதேபோல நமது பிள்ளைகளின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு, உமி மற்றும் சாம்பல் போன்ற கழிவுகளினால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தங்களது உற்பத்தித் தளங்களை மாற்றியமைத்து உற்பத்தியில் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் தெற்கு செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கத்தின் மாதாந்த கூட்டம் அதன் தலைவர்…

Read More

சிறுவர் தினத்தை முன்னிட்டு முசலி பிரதேச மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!

உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01)  இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது. சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், மாணவர்களுக்கு கற்றலுக்கான ஆர்வத்தை தூண்டும் நோக்குடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 500 க்கும்…

Read More

சியம்பலாங்கமுவ கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்!

சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே கல்நேவ  பிரதேச சபைக்குட்பட்ட சியம்பலாங்கமுவ  கிராமம். இக் கிராம மக்கள் பல வருடங்களாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவர்களது பிரச்சினையை அறிந்த  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான   இஷாக் ரஹுமான் இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக, கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்நேவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ்…

Read More

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் அமர்வு, முதல் தடவையாக தென்னாசியாவில் இடம்பெற வேண்டும் என யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) ஆகிய அமைப்புகளின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவையடுத்து, மைல்கல் நிகழ்வாக இந்த அமர்வு இலங்கையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வு இலங்கையின் மிக உயர்ந்த சிறிய நடுத்தர தொழில்முனைவோரான வணிக அபிவிருத்தி முகவராக இயங்கும், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினரை (NEDA) இலக்கு வைத்திருப்பது வரப்பிரசாதம் என கைத்தொழில் மற்றும்…

Read More

தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டப் போட்டியில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்….

மன்னார் தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவியில் பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டி…. இந்த போட்டியின் போது 13 அணிகள் பங்கேற்றத்துடன் முதல் மூன்று இடங்களைப்பெற்ற அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்வை அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…..

Read More

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள், சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

இலங்கையில் நிலைபேறான தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்க பிராந்திய மாநாடு, சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், பௌத்த இஸ்லாமிய இந்து மத பெரியார்களின் பங்குபற்றுதலுடன், அம்பாறை மொண்டி ஹோட்டலில் இன்று காலை (01) நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விஷேடமாகப் பங்கேற்று, இன நல்லிணக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக, இந்த மாநாட்டில் தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றமை விஷேட அம்சமாகும். அமைச்சர்காளன ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன்,…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”

40 ஆவது வேலைத்திட்டம்  சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு வேலைத்திட்டம் ௦2 மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, சேருவில, செல்வநகர், புளியங்குளம் புனரமைப்பு பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது….

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் உள்ளக பாதை அபிவிருத்தி!

நாடளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் பாடசாலைகளுள் ஒன்றான குருநாகல், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,  பாடசாலையின் உற்பகுதியை அழகுபடுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் உள்ளக பாதைகள் அமைக்கும் வேலைகள் நிறைவுபெற்ற நிலையில் உள்ளன. பாடசாலையின் உள்ளக பாதை பணிகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர், நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது, குளியாப்பிடிய பிரதேச சபை…

Read More