Headlines

கல்பிட்டி பிரதேச மக்களின் பாவனைக்காக குடிநீர்க் குழாய்கள் திறந்து வைப்பு!




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் அவர்களினால் (19) அன்று ரெட்பானா, சேனைக்குடியிருப்பு, எல்லிச்சேனை, நல்லாந்தலுவை ஆகிய பகுதிகளில் நீர்க்குழாய்கள் மக்களின் உபயோகத்திற்கு கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் பெறப்பட்ட நிதியொதுக்கீட்டில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் முயற்சியினால், பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் வேண்டுகோளுக்கிணங்க பெறப்பட்ட குடிநீர் குழாய்கள் மக்கள் பாவனைக்காக வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன், ஏற்கனவே இவ்வேலைத்திட்டங்கள் புழுதிவயல் மற்றும் மஞ்சாடிச்சோலை போன்ற கிராம மக்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் தேவையுடையவர்களைக் கண்டறிந்து பெயர்ப்பட்டியலை வழங்குமாறும் ஆஷிக் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

(ப)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *