Headlines

பிரதேச சபை உறுப்பினர் ஹம்சாவின் முயற்சியினால், ஒலுவில் பிரதேசத்தில் கலாச்சார மண்டபம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இவ்வருடம் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஒலுவில் பிரதேசத்தில் கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எ.எல். ஹம்சா சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே, உறுப்பினர் மேற்கொண்ட பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு குறித்த அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 50இலட்சம் நிதியினை மக்களுக்கு…

Read More

நெற்செய்கை வயல்களுக்கு தடையின்றி நீர்ப்பாசனம் வழங்க அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி ஏற்பாடு!

கிண்ணியா ஆயிலியடி, பக்கிறான் வெட்டை பகுதிகளில் நெற்செய்கை வயல்களுக்கு தடைப்பட்டிருந்த நீர்ப்பாசனத்தை தடையின்றி வழங்க அப்துல்லா மஹ்ரூப் எம்பி ஏற்பாடு. கடந்த சில தினங்களாக மேற்படி பிரதேச நெற்செய்கை மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு விவசாய சம்மேளனம் கொண்டு வந்ததையடுத்து, அரசாங்க அதிபர், கிண்ணியா பிரதேச செயலாளர், கந்தளாய், வான் எல நீர்ப்பாசன பொறியியலாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கமைய பாதிக்கப்பட்ட வயல்களுக்கு தடையின்றி நீரை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ன)

Read More

வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை மைதான வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதிக்கீடு!

மன்னார் மாவட்டத்தின் முசலிப்பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் முதற்கட்ட வேலைத்திட்டமாக மைதானத்தை செப்பனிடும் பணி இன்று (22) ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பணிப்புரைக்கு அமைவாக, மாகாண சபை உறுப்பினரும், வெள்ளிமலை பதியுதீன் பாடசாலையின் ஸ்தாபகருமான அலிக்கான் ஷரீப் அவர்களின் மாகாண சபை நிதியினூடாகவே இந்த மைதானத்திற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (ஐ)      

Read More

கழுதைகளுக்கான சிகிச்சை மற்றும் அறிவூட்டும் மையம் திறந்துவைப்பு!

மன்னார் மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி கட்டாக்காலிகளாக திரியும் கழுதைகளை முறையாக பராமரித்து, அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று மன்னார் தாய்லாந்து குடியிருப்பு சின்னக்கரிசலில் நேற்று (21)ஆரம்பித்து வைக்கப்பட்டது . இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்தார். மேலும், பிரதம அதிதியாக பங்குகொண்ட தவிசாளர் உரையாற்றும் போது, மன்னார் நகர மற்றும் பிரதேச மக்களை சிரமப்படுத்திய இந்த கழுதைகளை முறையாக பராமரித்து மக்களின்…

Read More

‘உள்ளூர் கைத்தொழில் துறையை நலிவடைய ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’ தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்!

உள்ளூர் கைத்தொழில் உற்பத்தி துறையினை எந்த வகையிலும் அரசாங்கம் நலிவடையச் செய்யவில்லை என்றும் கைத்தொழில் தொடர்பாக பிழையான கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இத்துறையினை தரம்மிக்க, உறுதியான பொருளாதார துறையாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27 (2) இலக்கத்திற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பியிருந்த கேள்வி ஒன்றுக்கு, இன்று காலை (22) பதிலளிக்கும் போதே…

Read More

‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’ கப்பல் கண்காட்சி தொடர்பான அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

கப்பல் கட்டுமானப் பணிகள் மற்றும் கப்பல் துறைசார் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் ஒப்பிடும்போது, இலங்கை குறைந்தளவிலான விகிதாசாரத்தில் ஈடுபடுகின்ற போதும், இந்தத் துறையில் இலங்கையின் ஏற்றுமதியானது தொடர்ச்சியாக வலுவான எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும், அதன் விளைவாக 2022 ஆம் ஆண்டில் படகு மட்டும் கப்பல் துறைசார் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 200 மில்லியன் டொலரை ஈட்டக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் காலியில் இடம்பெறும்…

Read More

கல்பிட்டி பிரதேச மக்களின் பாவனைக்காக குடிநீர்க் குழாய்கள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் அவர்களினால் (19) அன்று ரெட்பானா, சேனைக்குடியிருப்பு, எல்லிச்சேனை, நல்லாந்தலுவை ஆகிய பகுதிகளில் நீர்க்குழாய்கள் மக்களின் உபயோகத்திற்கு கையளிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் பெறப்பட்ட நிதியொதுக்கீட்டில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் முயற்சியினால், பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் வேண்டுகோளுக்கிணங்க பெறப்பட்ட குடிநீர் குழாய்கள் மக்கள்…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹுசைன் பைலா நியமனம்!

அரச வர்தகக் கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவராக முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார். (ன)

Read More