Headlines

மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் நியமனம்!




சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எச்.எம். நவவி தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்ததை அடுத்து ஏற்பட்ட குறித்த பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் முன்னாள் உபவேந்தர் கலாநிதி, எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (06) முதல் அமுலாகும் வகையில், தேர்தல்கள் ஆணையகத்தினால் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

(ன)

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *