Headlines

விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!




-ஊடகப்பிரிவு-

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தனது சொந்த நிதியிலிருந்து  விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளையாட்டு கழகங்களுக்கு, கரப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் இஷாக் ரஹ்மான் எம்.பியினால்  வழங்கி வைக்கப்பட்டது.

இளைஞர்களது விளையாட்டுத் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன, மத, கட்சி பேதமின்றி ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கின்ற பௌத்த, முஸ்லிம் இளைஞர்களுக்கே இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *