Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வு! செயலாளர் சுபைர்தீன் பங்கேற்பு!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் மல்வானை அமைப்பாளர் முஹம்மத் ரிபானின் முயற்சியில் யுவதிகளுக்கான சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், மல்வானை விதானகொடை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுகைத்தொழில் ஆலையை (Mini Garment) மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் நேற்று முன்தினம் (20) திறந்து வைத்தார்.

 

சுமார் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த சிறுகைத்தொழில் ஆலை திறப்பு நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிரணி தேசியத் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை, டாக்டர்.முனாசிக் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது பெண்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள், சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் முன்பள்ளி அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *