Headlines

மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் திறப்புவிழா!

-ஊடகப்பிரிவு- அல்/புர்கான் நலன்புரி அமைப்பின் முயற்சியினால் மன்னார், மூர்வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா நேற்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பிரதேசவாசிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவு மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றனர்.              

Read More

“உண்மையும், நேர்மையும் இருப்பதனாலேயே மக்கள் எம்பக்கம் அணிதிரள்கின்றனர்” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட்…

-ஊடகப்பிரிவு- உண்மையும், நேர்மையும் எங்கள் பக்கம் இருப்பதனாலேயே மக்கள் எம்மை நோக்கி அணிதிரண்டு வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனைத் திறப்புவிழா நிகழ்வு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ்…

Read More

வட்டாரக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை தேர்தல் தொடர்பாக வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை (15) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் தவிசாளர் ஹமீட், பிரதி தவிசாளர் நெளபல் மற்றும் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.    

Read More

ஹஸன் அலி – ரிஷாட் கூட்டணியும், முஸ்லிம் அரசியல் பலமும்!

எம்.எச்.எம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட கிழக்கு முஸ்லிம் அரசியல் பலத்தின் புதிய பரிமானம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலளார் ஹஸன் அலி மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உடனான கூட்டணியாகும். இன்று கிழக்கு (அம்பாறை) முஸ்லிம் அரசியல் பலத்தின் பிரதான சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அத்தாவுல்லாவின் தேசிய காங்கிரஸூம் திகழ்கின்றன. அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் எழுச்சிக்கான கீதம் முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். எனினும் கண்டி ரவூப் ஹக்கீம், அம்பாறை ” இடையே…

Read More

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

எம்.எஸ்.எம்.நூர்தீன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)  ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் மீராகேணி வட்டாரத்தில் போட்டியிடும் முகம்மட் அமீர் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீப் ஹாஜியார் முன்னிலையில் இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்றிரவு (15) இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட அமீர், ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு தான்,…

Read More

மு.கா அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றம்.. ஹனீபா மதனி அறிவிப்பு!

  -ஊடகப்பிரிவு-    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டவருமான மௌலவி ஹனீபா மதனி தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தை, மக்கள் காங்கிரஸின் பிராந்தியமாக மாற்றும் நிகழ்வு நேற்று மாலை (14) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இந்த…

Read More

வட்டமடு விவசாயிகளுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, வட்டமடு காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் நேற்று மாலை (14) சந்தித்துக் கலந்துரையாடினர்.                  

Read More

அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸின் பணிமனை அங்குரார்ப்பணம்!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனை ஒன்றை அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், தூய காங்கிரஸின் பிரமுகருமான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின்…

Read More

“சமுதாயத்தின் தேவைக்காகவே கட்சிகள் செயற்பட வேண்டும்” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட்…

  –எம்.ஏ.றமீஸ்–  கட்சிகள் சமுதாயத்தின் தேவையாக இருந்து செயற்பட வேண்டுமே தவிர கட்சியின் தேவைக்காகவும், கட்சித் தலைமைத்துவத்தின் தேவைக்காகவும் சமுதாயம் பயன்படுத்தப்படக் கூடாது என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று (14)  மாலை அக்கரைப்பற்று டி.எப்.சி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சியம்பலாகஸ்கொடுவ ஜும்ஆ பள்ளியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டின் கீழ்,  சியம்பலாகஸ்கொடுவ ஜும்ஆ பள்ளிவாசலில், மலசல கூட புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் (12) ஆராம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில், முன்னாள் குளியாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் இர்பான் மற்றும் அப்துல் கையூம் ஆகியோரின் பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிக்காக, சுமாார் 17,00…

Read More

தூய காங்கிரஸ் அணியினர், தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டமைப்பில் இணைவு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆகியன இணைந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான மௌலவி ஹனீபா மதனி தலைமையில், முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் ஆதம்லெப்பை மர்ஜூன் உள்ளிட்ட, தூய காங்கிரஸ் அணியினர் மற்றும் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்களும் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர். இன்று மாலை (14)  அக்கரைப்பற்று டி.எப்.சி (TFC) மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில்,…

Read More