Headlines

முஸ்லிங்களின் தேசிய தலைவன் ரிசாட் என்பதை நிருபிக்கும் காலம் இது !

கொடுரமான அரக்கர்காளாக மஹிந்த அரசை சித்தரித்து அவர்களின் அடக்குமுறைகளை இல்லாதொழிக்க முஸ்லிம் உம்மத்துக்களின் அபிலாஸைகளை வெற்றிகொள்ள நல்லாட்சி அரசின் நிருவுதளுக்காக முதலில் கைகொடுத்த மக்கள் அதிகாரமிக்க அரசியல் சக்திஎன்றால் அது இளம் தலைவர் ஒருவரை தலைமையாக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. முஸ்லிங்களின் ஏக தலைவர் நானே,மக்களின் கட்சி எனது கட்சி என தம்பட்டம் அடித்தவர்கள் மஹிந்த அரசில் நாகம் படமெடுத்து ஆடியபோது அந்த ஆட்சியில் அந்த நாகத்தின் ஆட்டத்தை…

Read More

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன்,  தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்,கிழக்கு…

Read More

அமைச்சுப்பதவி ஒரு பொருட்டள்ள. சாய்ந்தமருதுவில் அமைச்சர் றிஷாட்

-ஊடகப்பிரிவு. முஸ்லிம் சமூகத்திற்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின் ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும் வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக…

Read More

யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பண நிகழ்வு

யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பண நிகழ்வு இன்று (10) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது. வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பத்தியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் விசேட அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர், ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாக செயலாளர் ஹனீபா,…

Read More

பதியுதீன் பொது இடங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கிறார் – சிங்கள அமைச்சர்கள் விசனம்!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவருவதாக அரசாங்கத்தின் உயர் கதிரையில் இருக்கும் முக்கியஸ்தர்களிடம் பெரும்பான்மை அமைச்சர்கள் சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாரம் இடம்பெற்றிருந்த பாராளுமன்ற அமர்வில் சமகால நிகழ்வுகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மிகவும் ஆவேசமாக பேசியிருந்த நிலையில் பிரபாகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்த புலனாய்வு பிரிவுக்கு ஏன் இன்னும் இரு தேரரை பிடிக்க முடியவில்லை என ஜனாதிபதியிடமும் கேள்வி எழுப்பியிருந்தார். இது தவிர பொது இடங்களிலும் அவர்…

Read More

காத்தான்குடியில் 379சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

காத்தான்குடியில் 379சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி விசேட அதிதியாக கலந்து கொண்டார். பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான லோகநாதன், கலீல், கண்னண், மகளிர் இணைப்பாளர் திருமதி மீனா ,கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Read More

கொக்கட்டிச்சோலையில் 378 சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

  ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் திரு கணேச மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி விசேட அதிதியாக கலந்து கொண்டார். பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான லோகநாதன், கலீல், கண்னண், மகளிர் இணைப்பாளர் திருமதி மீனா ,கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Read More

சமூக பிரச்சினைக்காக ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துவிட்டது. சம்மாந்துறையில் அமைச்சர் றிஷாட்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று மாலை (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, முஸ்லிம் சமூகம் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த அரசின் காலத்தைப் போன்று…

Read More

விசாரணைக்கு முதலே தீர்ப்புக் கூறும் பொலிசார். அமைச்சர் ரிஷாட் காட்டம்

ஊடகப்பிரிவு மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து வேணடுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும் அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள் இடம் பெறும் போதெல்லாம் அதற்கு வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மகியங்கனையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனம் ஒன்று எரிந்து கொண்டிருக்கும் போதே, அந்தப் பிரதேச பொலிஸ் நிலையப்…

Read More

கலாநிதி ஜெமீல் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஜெமீல் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

Read More

AM. ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில் மூக்கக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதீவூதின் அவர்ளின் வழிகாட்டலில் கட்சியின் பிரதி தலைவரும் , அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் தலைவர் AM. ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில் மூக்கக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

Read More

றிசாட் பதியுதீனும் ஜனாதிபதியும்

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்திற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நன்கு திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களின் மீது தொடர்…

Read More