Headlines

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஆக்கபூர்வமான முதலீட்டு சூழலை ஏற்படுத்தியுள்ளது!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய முதலீட்டாளர்களை ஆர்வப்;படுத்தியுள்ளதுடன் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாக திகழும்எல்.என்.ஜி எரிவாயு நிறுவனம், இலங்கை சந்தையில் முற்றிலும் மாறுபட்ட புதிய பசுமைஎரிவாயுவினை விநியோகிப்பதற்கு முன்வந்துள்ளது என இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின் வர்த்தக பிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா தெரிவித்தார்.   கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனானஇடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ரமேஷ் குமார் முத்தா இதனை தெரிவித்தார். இவ்விசேட சந்திப்பின் போது ரமேஷ் குமார் முத்தா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:   இலங்கை மற்றும் இந்திய பொருளாதாரங்களில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன. இருநாட்டுபொருளாதாரங்களும் வளர்ச்சிப் பாதையில் உள்ளன. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ளபொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய  முதலீட்டாளர்களை ஆர்வப்படுத்தியுள்ளதுடன் ஆக்கபூர்வமானமுதலீட்டு  சூழலை ஏற்படுத்தியுள்ளது. எமது பிரதிநிதிகளின் சிறப்பு உறுப்பினர்கள் இலங்கையில் எரிசக்தி, எல்.என்.ஜி எரிவாயு, ஏற்றுமதி இணைப்புகள் மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றில்பங்கெடுத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். இந்தத் துறைகளில் இலங்கையில் முதலீடு செய்வதற்கும்நாம் திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளரான பெட்ரோனாட்எல்.என்.ஜி எரிவாயு லிமிடெட் இலங்கையில் ஒரு பெரிய அளவிலான திட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.   இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நடுத்தர சிறியகைத்தொழில்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டஉறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது வர்த்தகம் தலைமையிலான,இலாப நோக்கமற்ற கூட்டமைப்பாகும். இது ஒரு முன்னணி கொள்கை செல்வாக்குக்கு உள்ளாகியுள்ளசெயல்மிகு பயனர். முக்கியமாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பானது இந்திய நடுத்தர சிறியகைத்தொழில்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கு ஒரு குறிப்புபுள்ளியாக திகழுகிறது. இவை 2 லட்சம் உறுப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. இந்தியதொழில்துறை கூட்டமைப்பானது சீனா, அவுஸ்திரேலியா, பஹ்ரைன், எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி,சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் வெளிநாட்டு அலுவலகங்கள்கொண்டுள்ளதுடன் 106 நாடுகளில் 320 நிறுவனங்களுடன் நிறுவன கூட்டுறவை கொண்டுள்ளது.அத்துடன் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு இந்தியாவின் மிகப் பெரிய தொழில்துறைசம்மேளனமாகவும் திகழுகின்றது என்றார் இந்திய தொழில்துறையின் கூட்டமைப்பின்  வர்த்தகபிரதிநிதிக் குழுத் தலைவர் ரமேஷ் குமார் முத்தா.   மேற்படி இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்: எங்கள்தொழில்துறைக்குள் இந்திய முதலீட்டாளர்களை நாம் வரவேற்கின்றோம்.   பெட்ரோனாட் எல்.என்.ஜிநிறுவனம் ஏற்கனவே இலங்கை சந்தையில்  முதலீடுகளை மேற்கொள்வதற்கான திட்டத்தைமுன்வைத்துள்ளமைக்கு  எனது பாராட்டுக்கள் உங்கள் முயற்சிகள் உள்ளூர் எரிவாயு சந்தையைவலுப்படுத்த முடியும். நமது கூட்டு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நோக்கமானது, உயர்நடுத்தர வருமான மட்டத்தை எட்டுவதற்கும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கிய பங்கைவகிப்பதற்குமாக செயலாற்துகின்றது.    இலங்கைக்கான இந்தியாவின் முதலீடு ஆண்டுதோறும் 50-70 மில்லியன் அமெரிக்க டொலருக்குஇடைப்பட்டதாக காணப்படுகின்றது.  இந்திய முதலீட்டாளர்கள் இங்கு குறிப்பிடத்தக்க பங்கைக்கொண்டுள்ளனர். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையின் …

Read More

புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக தமிழ்க்கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

ஊடகப்பிரிவு   வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க்கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று, எங்களிடத்தில் கூறவேண்டும். பாராளுமன்றத்தில் நேற்று (06.06.2017) தினேஷ் குணவர்த்தன எம்பி முன்வைத்த ஜெனிவா பிரேரணைக்கு எதிரான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்தார். அவர் உரையாற்றிய போது கூறியதாவது, 30வருடகால…

Read More

எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம், நாம் இனியும் பொறுக்கத்தயாரில்லை. பாராளுமன்றில் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ரிஷாட்

ஊடகப்பிரிவு முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கெதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?. இவ்வாறு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெகுண்டெழுந்தார். ஜெனீவா மனித உரிமைப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது, அல்லாஹ்வையும், முஸ்லிம்களின் இறைத்தூதரையும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்தும்…

Read More

அ.இ.ம.கா.மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (05) வழங்கி வைத்தார். 2006 ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபை தேர்தலில் துஆ கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாயிஸ் பின்னர் 2009 ஆண்டு மேல்மாகாணசபை தேர்தலில் மீண்டும் துஆ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு மேல் மாகாணசபை தேர்தலில் அகில…

Read More

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து

ஊடகப்பிரிவு நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன்கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு நஷ்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று அதிகாலை 2017.06.06 விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள எரிக்கப்பட்ட கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் சம்பவங்களை பார்வையிட்டதுடன் நிறுவன உரிமையாளரிடமும் விபரங்களை கேட்டறிந்தார். நுகேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் உரையாடிய அவர் இவ்வாறான சம்பவம் இந்தப் பகுதியில் முதற்தடவை அல்ல…

Read More

இறப்பர் பாஸ்மதி வெறும் நாடகமே சதொச தலைவர் அறிவிப்பு

ஊடகப்பிரிவு லங்கா சதொசவில் இறப்பர் அரிசி விற்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கதையை ஏற்க முடியாது என    சதொச தலைவர் டி.எம்.பி.தென்னகோன். இன்று 2017.06.05 வொக்ஷல் வீதி இல் உள்ள சதொச நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசியை பூரண பரிசோதனைகளின் பின்னரே எடுக்கப்பட்டதாகும.; என்றும் குறித்த அரிசி 2019.03.17 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தபடக்கூடிய நிலையில் உள்ளது. நேற்றைய  தினம் 05.06.2017; முதல் சமூக வலைத்தளங்களில்…

Read More

சதொச நிறுவனத்தின் வளர்ச்சியை மழுங்கடிக்க முயற்சி வதந்திகளை நம்ப வேண்டாம்.

ஊடகப்பிரிவு சதொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சதொச நிறுவனத்தினூடாக பாவனைக்குப் பொருத்தமில்லாத இறப்பர் பாஸ்மதிஅரிசி விற்கப்பட்டு வருவதாக சில திட்டமிட்ட குழுக்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த திட்டமிட் நடவடிக்கையானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மற்றும் சதொச நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்பட்டுவரும் செயலாகும் என அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசி 2017.05.15 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து 20 மெட்ரிக்தொன் பாஸ்மதி அரிசி…

Read More

இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களுக்கு அமைச்சர் ரிஷாட் நேரில் விஜயம் புனரமைப்புக்கு நிதி உதவியும், அகதிகளுக்கு நிவாரணமும் கையளிப்பு

-ஊடகப்பிரிவு இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள், இந்து கோவில்களின் புணரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கும் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும், வீட்டுப் பாவனைக்கு தேவையான பொருட்களையும்…

Read More

துயர் துடைக்கும் பணியைத் துரிதப்படுத்த அமைச்சர் றிஷாட் அதிரடி நடவடிக்கை

இரத்தினபுரி கூட்டத்தில் முக்கிமான தீர்மானங்கள். சுஐப் எம் காசிம் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் மிக மோசமாக அழிவுக்குட்பட்ட இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் அனைத்துப் பிரதேசங்களையும் துரிதமாக மீள்கட்டியெழுப்பி பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டுள்ளார். இந்தப்பிரதேசத்தில் இடம்பெற்ற சேத விபரங்களின் மதிப்பீட்டறிக்கையை ஒரு வார காலத்துக்குள் கையளிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இரத்தினபுரி தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களையும் சீர் செய்யும் பணிக்காக பொறுப்பாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்…

Read More

இரத்தினபுரி ஜூம்ஆபள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுடன் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு

ஊடகப்பிரிவு இரத்தினபுரி வெள்ளத்தாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரி தொகுதி அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் இரத்தினபுரி ஜன்னத் ஜூம்ஆ பள்ளிவாயலில் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். இவ்விசேட  கலந்துரையாடலில் எதிர்க்கட்சித்  தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி, சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கேற்று அன்பையும் நல்லெண்ணத்தையும்…

Read More

கவிக்கோவின் இழப்பு தமிழ் கூறும் உலகுக்கு பாரிய இடைவெளி அமைச்சர் ரிஷாட் அனுதாபம்

ஊடகப்பிரிவு உலகப் பெருங் கவிஞரும், தமிழ் பேராசிரியருமான கவிக்கோ அப்துல் ரஹமானின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பாரிய இழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவிக்கோவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார். வானம்பாடி இயக்க கவிஞர்களோடு இணைந்து இயங்கிய தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த தமிழ் பேராசானின்,  எழுத்துக்களின் தாக்கம் இலங்கை எழுத்தாளர்களையும் ஆகர்ஷித்ததுடன் அவர்களை எழுதத் தூண்டியது. அதுமாத்திரமன்றி சிறந்த எழுத்தாளர்களாகவும் அவர்களை ஆக்கியது….

Read More

இரத்தினபுரி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நியமனம்

அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும்…

Read More