Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் ஏ எம் ஜெமீல் தலைமையில் மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கெளரவ தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கொளரவ ஏ.எம்.ஜெமீல் அவர்களின் வறிய மக்களுக்கான 1000ம் இலவச மூக்குக் கண்ணாடிகள் என்னும் திட்டத்திற்கமைவாக, தற்போது19.08.2017 சனிக்கிழமை இரண்டாவது கட்டமாக சாய்ந்தமருது மக்களுக்காக மேலும் 250 மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Read More

தேர்தல் வெற்றிக்காக இனவாதம், மதவாதத்தை உசுப்பி விடுவது சமூக ஒற்றுமையை பாழாக்கும். வவுனியாவில்; அமைச்சர் றிஷாட்.

தேர்தல் வெற்றிக்காக  இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையை பாழ்படுத்துகின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் கலாநிதி மொஹமட் ஷரீப் அனீஸ் அவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று மாலை (18.08.2017) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, அரசியல்…

Read More

பதவியைப்பறிப்பதற்கு பல முனைகளிலும் சதி முயற்சிகள். வவுனியாவில் அமைச்சர் றிஷாட்.

 நாங்கள் நிர்மாணித்த கட்டிடங்களையும் பாலங்களையும் எங்களுக்குத் தெரியாமல் அங்குரார்ப்பணம் செய்து வைத்துவிட்டு, அந்த நிகழ்விலேயே எங்களை விமர்சிக்கும் அரசியல் வங்குரோத்துத்தனம் சில அரசியல்வாதிகளுக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சாளம்பைக்குளம் ரஹ்மதுல்லா ஜன்னா பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை (18.08.2017) இடம் பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். அவர் உரையாற்றிய போது தெரிவித்ததாவது, எனது அமைச்சுப் பதவியை பறித்துவிட வேண்டும் என்ற…

Read More

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை கிராமத்தில் இரண்டு கொங்ரீட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும், அம்மார் கல்வி கலாசார நிலையத்திற்கு தளபாடங்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! எதிர்வரும் காலங்கள் எங்களை மீண்டும் துரத்துகின்றது. கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு…

Read More

தேர்தலை நடாத்தினால் 20வது திருத்தம் தேவைப்படாது பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

  இந்த நாட்டில் இருக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து உரிய நேரத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்குமாக இருந்தால் இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு தேவைப்பாடு கிடையாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழிலாளர்களுக்கு உபகரணம் வழங்கு நிகழ்வு கல்வி அபிவிருத்தி சங்க கட்டடத்தில் பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எல்.ஏ.லத்தீப் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில்…

Read More

வடக்குக்கு விஜயம் செய்யும் ஐ.நா உயர் அதிகாரிகள் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளை சந்திப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்? ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ,ராஜதந்திரிகளும், உயர் அதிகாரிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை மாத்திரமே சந்திப்பதில் அக்கறைகாட்டுவதாகவும், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகமான முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ, அமைப்புக்களையோ சந்திப்பதில் எத்தகைய கரிசனையும்  காட்டுவதில்லையெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்தார்.  இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப் பிரதிநிதி உனா மெக்லோலே அவர்களுக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்….

Read More

முசலி மண் மீட்பு போராட்டம்! மூக்கை நுழைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போட வேண்டாம் -அலிகான்

வில்பத்து விவகாரம் சம்மந்தமாக மேற்குறித்த விடயம் பற்றி நாளேடுகளிலும் முகநூல்களிலும் பல் வேறுபட்ட கருத்துக்களை சிலர் பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். வில்பத்து என்பது மோதரகம(உப்பாறு)ஆற்றிற்கும் காளாவி ஆற்றிற்கும் இடைப்பட்ட 37Km. தூரமுடைய அரச தேசிய நந்தவனமாகும். இது அநுராதபுர மாவட்டத்திற்கு சொந்தமானது என்பதை தெளிவு படுத்துகின்றேன்.இதற்குள் எவ்வித காணி சுவீகரிப்புகளையோ வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற திட்டங்களையோ  அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் மேற்கொள்ளவில்லை என மிகத்தெளிவாக எடுத்துக் கூறுகின்றேன். அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி மூலம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு

வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த 17 மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு  நிதி ஒதுக்கீட்டின் மூலம் துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று 16 பிரதி அமைச்சரின் இணைப்பாளர் மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றுகையில். இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளுக்கு…

Read More

கடன் பளுவில் தத்தளிக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

23வருடங்களுக்கு முன்னர் விதை உருளைக்கிழங்கை கடனாகப் பெற்று, இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது தவிக்கும்  உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் 73பேருக்கு  நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு வியாபாரிகளுக்கு உறுதியளித்தார். ஊவா மாகாணத்தைச் சேர்ந்த  உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து உருளைக்கிழங்கு உற்பத்தியால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் மற்றும் பாதிப்புக்கள் குறித்து விபரித்தனர். கெபட்டிபொல  உடபலாத்த பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில்;…

Read More

இப்பிரதேசத்தின் சகல விடயங்களிலும் முனைப்புடன் செயற்பட்டவர் சட்டத்தரணி எம்.பி.எம்.ஹு சைன்-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி

கல்குடா தொகுதியின் மூத்த சட்டத்தரணியும் எமது பிரதேசத்தின் சிறந்த கணிதபாட ஆசானுமாகிய எம்.பி.எம்.ஹுசைன் சேரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். இன்று (14.08.2017) திங்கட்கிழமை காலை வபாத்தான ஓட்டமாவடியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியும் பதில் நீதவானும் முன்னாள் கோறளைப்பற்று காழி நீதிபதியுமான எம்.பி.எம்.ஹுசைனின் மறைவை முன்னிட்டு பிரதி அமைச்சரி விடுத்துள்ள அனுதாப செய்தியிலலே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் அவர்…

Read More

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை, இம்மாத இறுதிக்குள் பிரகடனம்: கலாநிதி ஜெமீல் தெரிவிப்பு

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால  எதிர்பார்ப்பாக இருந்துவரும் உள்ளூராட்சி மன்றம் என்ற கனவு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இடைவிடாத முயற்சியால் இம்மாத இறுதிக்குள் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, அக்கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.சாய்ந்தமருது பிரதேசத்தை தனி  உள்ளூராட்சி மன்றமாக பிரகடனப்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல், அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நேற்று திங்கட்கிழமை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமைலான…

Read More

மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் சுபைதீன் அவர்கள் செயற்படலாம் – நீதிமன்றம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்தீன், செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடையுத்தரவு கோரி முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடையுத்தரவை வழங்குவதில்லையென மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு, மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது, நீதிமன்ற தீர்ப்புக்கமைய செயலாளர் நாயகம் தொடர்ந்தும் தமது கடமைகளை செய்ய எந்த…

Read More