Headlines

உயர் தேசிய டிப்ளோமா பரீட்சை ஒத்திவைப்பு

ஹஜ் பெருநாள் தினமான எதிர்வரும் 2ம் திகதி  நடைபெற ஏற்பாடாகியிருந்த உயர் தேசிய டிப்ளோமா பொறியியல் துறையின்;  SLIATE ( ஆங்கில பாடநெறி) பாடத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை நடாத்துவதற்கு இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிலாரி டி. சில்வா தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்புகொண்டு பெருநாள் தினத்தன்று இந்தப்பரீட்சையை நடாத்துவதால் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை எடுத்துரைத்த…

Read More

மூடிக்கிடக்கும் வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளகட்டியெழுப்ப துரித திட்டம் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

யுத்த காலத்தில் செயலிழந்து போன வடக்கு கிழக்கிலுள்ள கைத்தொழிற்சாலைகளை வெளிநாட்டு உதவியுடன் மீளக்கட்டியெழுப்பி மீண்டும் அவற்றை இயங்கச்செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாந்தை சோல்ட் லிமிடட்டின் புதிய நிர்வாக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும்,  அந்த நிறுவனத்தின் அரச சுற்றுலா விடுதி திறப்பு விழாவும், நேற்று ஞாயிற்றுகிழமை (27.08.2017) அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போதே, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர்…

Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு  அமைச்சர் ரிஷாட்  அழைப்பு

யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக  கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று காலை (28)…

Read More

மாந்தை உப்பு கூட்டுத்தாபனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நிர்மாணிக்கப்பகவுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் அந்நிறுவனத்தின் சுற்றுலா விடுதி கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு மன்னாரில் இன்று (27) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம் எம் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஸ்டேன்லி…

Read More

பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பொலனறுவையில் நிர்மானிக்கப்படவுள்ள வர்த்தக மையத்தின் இடத்தை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சென்று பார்வையிட்டார். பொலனறுவை மாவட்டத்தின் கதுறுவெல பிரதேசத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 324 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் வர்த்தக மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்….

Read More

குருநாகல்  பள்ளிவாசல்கள் மீதான  தாக்குதல்களின் பின்னணியை கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள். பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் மீது கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தாக்குதல் குறித்தான பின்னணியை கண்டறிவதோடு  சூத்திரதாரிகளையும் கைது செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடமேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபெயசிறி குணவர்த்தனவிடம்  வலியுறுத்தியுள்ளார். இன்று காலை (27/08/2017) பிரதி பொலிஸ்மா அதிபரிருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், இன்று அதிகாலை நாரம்மல பொல்கஹயாய ஜும்மா பள்ளிவாசல் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலை விபரித்ததுடன் இது தொடர்பில்…

Read More

பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கிராமத்தில் ஆற்றிய உரை

அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுமனே துவேசத்தை தூண்டுபவர்களாக இருந்தால் அவர்களில் நீங்கள் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் வித்தியாபுர கிராமத்தில் அமைக்கப்படவுள்ள நெற்களஞ்சியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நெல்சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் திசநாயக்க தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்நாட்டில் தமிழ் மக்கள் பட்ட…

Read More

பொது அறிவு பரீட்சை 4ம் திகதி திங்கட் கிழமையாக மாற்றம்.  

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 3ம் திகதி நடாத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த போதும் அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாகயாகையால் 4ம் திகதி திங்கட் கிழமை நடாத்துவதென தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகப்பிரிவு

Read More

எல்லை மீள் நிர்ணத்தில் இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாவிட்டால் பதவியைத் துறந்தாவது போராட்டம் நடத்துவோம். பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் சூளுரை

  நல்லாட்சியை உருவாக்குவதில் மும்முரமாகச் செயற்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எல்லை மீள் நிர்ணயத்தில் கூட அநியாயம் இழைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூல விவாததில் அமைச்சர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது, நான் மிகவும் மன வேதனையுடன் இச்சபையில் உரையாற்றுகின்றேன். மீள எல்லை நிர்ணயத்திற்கான குழுவை அமைச்சர் பைசர் முஸ்தபா அமைத்த போது இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமென நாங்கள் மிகவும்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி கிழக்கு முதலமைச்சருக்கு சவால்

கடந்த வாரம் ஓட்டமாவடியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் கோவைகளை உயர்த்திக் காட்டி அபிவிருத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரால் முடியுமாக இருந்தால் தேசிய ஊடகமொன்றில் விவாதத்திற்கு அழைக்கின்றேன் முடியுமாக இருந்தால் அங்கு வந்து கோவைகளை காட்டட்டும் என்று என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை 206சி கிராமத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் கிளை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் புதன்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு…

Read More

ஹஜ் தினத்தில் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை பொது அறிவு பாடத்தை 3ம் திகதிக்கு நடாத்த கல்வி அமைச்சு முடிவு அமைச்சர் ரிஷாட்டின் கோரிக்கை ஏற்பு

எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு,  கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஏதிர்வரும் 2ஆம் திகதி முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால்,  அன்று இடம்பெறவிருந்த குறிப்பிட்ட பாடத்திற்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக  அமைச்சர் அகிலவிராஜ்; அறிவித்துள்ளார். பரீட்சையை திட்டமிட்டப்படி…

Read More

மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதித் திறப்பு விழா

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் சுற்றுலாவிடுதித் திறப்பு விழா, எதிர்வரும் சனிக்கிழமை 27.08.2017 அன்று காலை 9.30மணிக்கு மன்னாரில் இடம்பெறவுள்ளது. மாந்தை உப்புக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளார். விஷேட விருந்தினராக பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான, சால்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன்,…

Read More