Headlines

மீள்குடியேற்ற துரித செயலணி இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் 

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் மீள்குடியேற்ற  துரித செயலணியின் இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால் மீள்குடியேற்ற துரித செயலனியூடாக மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான  சுமார் 104 வீடுகள் கட்டுவதற்கான. அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு  கிராம மக்களின் வேண்டுகோளின் பேரில் பிரதம விருந்தினராக வடமாகான சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான   றிப்கான் பதியுதீன் அவர்களும் மீள்குடியேற்ற…

Read More

புத்தளம் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும். அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜித அறிவிப்பு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையாக மாற்றித்தர அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அதற்கான திட்ட வரைபை ஒருமாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இன்று காலை மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்குள்ள வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த பல வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுத்த பின்னர் மறிச்சுக்கட்டி இலவன்குளம்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் சிலாவத்துறை வைத்தியசாலை கட்டிடம் திறந்துவைப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். கடந்த மாதம் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்து புத்தளம், மன்னார் மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை எடுத்துரைத்திருந்தார். அந்த சந்திப்பின் பின்னர் இந்த பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளின் புனரமைப்புக்காகவும் ஏனைய வைத்திய வசதிகளுக்காகவும்…

Read More

மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தற்காக இனவாதிகள் தந்த பட்டமே ‘காடழிப்பு அமைச்சர்’ பண்டாரவெளியில் அமைச்சர் ரிஷாட்.

முசலி மக்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று முன்னெடுத்தற்காக காடழிப்பு அமைச்சர் என்ற பெயரை  இனவாதிகள் தனக்கு சூட்டிய போதும் மனிதாபிமானத்துடனும் மனசாட்சியுடனுமே மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரவெளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் யு என் ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைத்துகொடுக்கப்பட்ட ஆசிரியர் விடுதி கட்டிட திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்….

Read More

தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க எத்தனிப்போருக்கு இடமளிக்க வேண்டாம். மன்னாரில் அமைச்சர் றிஷாட் 

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் தற்போது படிப்படியாக மறைந்து வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் அமைச்சரின் முயற்சியினால் ஜப்பானிய அரசின் நிதிவுதவியுடன் அமைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான விடுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் மாஹிரின்…

Read More

இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்” உணவு, பொதியிடல் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்;.  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த  மண்டபத்தில் உணவு, பொதியிடல், விவசாயம் தொடர்பான கண்காட்சியை அமைச்சர் இன்று (04.08.2017) அங்குரார்ப்;பணம் செய்துவைத்தார். எதிர்வரும் 6ம் திகதிவரை இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை இலங்கை உணவு  பதனீட்டாளர்கள் சங்கம் மற்றும் இலங்கைப் பொருட்காட்சி, மாநாட்டு சேவைகள் நிறுவனம் ஆகியவை இணைந்து…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் இஷாக் ரஹ்மான் தலைமையில் குடிநீர் திட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் மக்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு கருணை மிக்க ஆட்சி உறுதியான நாடு எனும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டவாறு அனைவருக்கும் நலம் என்ற எண்ணக்கருவை நனவாக்கி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பின் பெரில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் காரியத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இலங்கை சிறுநிரக நோய் தடுப்பு பிரிவுக்கான ஜனாதிபதி செயலகத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை கடற்படையின் சமுக  சேவை நிகழ்சசி திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்ட நீர்…

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் கந்தலாய் பிரதேசத்துக்கான பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கபட்டது. இந் நிகழ்வில் சட்டத்தரணி மதார் , இணைப்பாளர் ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

புத்தளம் இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி

புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக மன்னார்ப் பாதையை  மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், அந்தப் பாதையிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுகுகூட்டம் இன்று மாலை (2017.08.03) இடம்பெற்ற போது மாவட்ட அபிவிருத்திக்குழுவின்  இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் கொண்டு வந்த யோசனையை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இது தொடர்பாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகைள ஒப்படைத்தது. இந்தக்கூட்டத்தில் மன்னார்…

Read More

பாடசாலை  அரசியலுக்கான  களம் அல்ல  வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமையப்பெற்ற பாரம்பரிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலைக்கு பல அபிவிருத்தி பணிகளை மேட்கொண்டுவரும் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் மற்றுமொரு உதவியாக தளபாடங்களை தனது பன்முக நிதியிலிருந்து பாடசாலை அதிபர் அவர்களிடம் கையளித்தார் மேலும்…

Read More

பல்கலைகழகத்திற்கு தெரிவான மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிப்பு

திரு/கிண்/ முள்ளிபொத்தானை கோட்ட கல்வி பிரிவில் 2015,2016 ஆண்டுகளில் பல்கலைகலகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் விளையாட்டு துறையில் அகில இலங்கை , மாகாண மட்டங்களில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு இன்ற முள்ளிபொத்தானை அல் இ ஹிஜ்ரா மத்திய கலூரியில் இடம்பெற்றது. இக்கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து பரிசில்களை…

Read More

அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதிபெறுவது இலகுவான விடயமல்ல அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர்,  அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் எம்.பி., ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் பிரதேச செயலாளர் மரியதாசன்…

Read More