Headlines

தேர்தல்கள் நெருங்கும் போது மக்களை தேடிவரும் அரசியல் வியாபாரிகள் குறித்து அவதானம் வேண்டும் மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம் சமூதாயத்தின் வாக்குகளை மொத்தமாகச் சூறையாடி, பேரம்பேசி, தமது சுயலாபங்களைப் பெற்றவர்கள் மீண்டும் தேர்தல்கள் நெருங்கும் போது வித்தியாசமான பாணியில் வாக்குகளை வசீகரிக்கும்; தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளத்தில் அல் – அறபா விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, அற்பசொற்ப இலாபங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும்…

Read More

மத்திய அரசும் மாகாண அரசும் இணைந்து செயற்படுவதன் மூலமே  அபிவிருத்தியின் உரிய இலக்கை எட்ட முடியும். மன்னார் நானாட்டானில் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதிஒதுக்கீடுகளால் மக்கள் உரிய பலனைப் பெறுவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ‘நிலமெகவர’ வேலைத்திட்ட ஜனாதிபதி நடமாடும் சேவை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு…

Read More

நிலமெகவர தேசிய வேலைத்திட்டம் இன்று மன்னாரில்.. பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெகவர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று (09) மன்னார் மாவட்டத்தில் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்  மற்றும் பிரதேச செயலாளர் பரமதாஸ், முப்படை உயர் அதிகரிகள்,…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில் குருணாகலில் மினி ஆடைத்தொழிற்சாலை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் குருணாகல் வாரியப்பொல, துத்திரிவௌ கிராமத்தில் மினி ஆடைத்தொழிற்சாலை  அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில்வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த மினி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு, தையல் இயங்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலையின் அங்குரார்ப்பன நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற  போது குருணாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ…

Read More

காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர்…

மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக காணி விடுவிப்பு செய்வது பற்றி ஆராயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மீண்டும் எதிர்வரும் இம்மாதம் 9 ஆம்,10 ஆம் திகதிகளில் முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலகப் பிரதேச செயலகங்களுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜனாதிபதியினை ஜூலை மாதம்  சந்தித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகளினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் முசலி பிரதேச மக்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மேற்படி குழு…

Read More

கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கின்ற கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்கிழமை விவசாய அமைப்பின் தலைவர் எம்.வி.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் நூற்றுக்கும் மேட்பட்டோருக்கு சுய தொழில் வாய்ப்பு

வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முசலி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரு நாள் கோழிக்குஞ்சிகள் வழங்கிவைக்கப்பட்டது  முசலி பிரதேசத்தில் வாழும் மக்களின் வறுமை நிலையினை மாற்றி அமைக்கவும் சுயதொழில் செய்து தமது குடும்பங்களை கொண்டு செல்லும் ஒரு வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இக் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது முசலி பிரதேச சபைக்குட்பட்ட 5 கிராமத்தில் வாழும் சுமார் 100ம்…

Read More

இலங்கை பங்களாதேஷூக்கிடையிலான கூட்டுவேலைத்திட்ட அமர்வு இந்தவருட இறுதியில் கொழும்பில் இடம்பெறும் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

  இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு இந்த வருட இறுதிப்பகுதியில் இடம்பெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட் அவர்களை கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, பொருளாதார உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. ‘இரண்டு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர வர்த்தக செயற்பாடுகள்…

Read More

சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையில் டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறி அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில் முன்னேற்றகரமான செயற்பாடுகள்

சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையிலான டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறிகளை தேசிய வடிவமைப்பு நிலையம், இலங்கை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கிவருவதாகவும், இந்தப் பாடநெறியில் தேர்ச்சிபெற்றோர் வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் நல்ல சம்பளத்துடன் இலகுவான தொழில் வாய்ப்பை பெற வழி ஏற்பட்டுள்ளதாகவும், நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான் லத்தீப் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிபெற்ற 96பேருக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை…

Read More

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்த ஐ.நாவும் சர்வதேச சமூகமும்  உடன் தலையிடவேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை

மியன்மாரிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு இராணுவம் நடாத்திவரும் காட்டுமிராண்டித்தனமான, எல்லைமீறிய வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், சர்வதேச சமூகமும், ஐ.நாவும் மியன்மார்; முஸ்லிம்கள் மீது இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனையானது  எனவும் தெரிவித்துள்ளார். மியன்மார் வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார். சுமார் 400 அல்லது…

Read More

வரலாற்றுப் பொக்கிஷத்தை இழந்து தவிக்கின்றோம். அமைச்சர் றிஷாட் அனுதாபம்

சிங்கள, தமிழ் முஸ்லிம் மூவினங்களின் இன நல்லுறவுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு பெருமகனை இலங்கை வாழ் மக்கள் மக்கள் இழந்து தவிப்பதாக முன்னாள் அமைச்சர் அஸ்வரின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசியல் வானிலே ஒரு தாரகையை இழந்து விட்டோம். இன, மத பிரதேச வாதங்களுக்கப்பால் நின்று மக்கள் பணி செய்த மாமனிதர் அஸ்வர். பாராளுமன்ற உறுப்பினராய், அமைச்சராய்,…

Read More

ஒரு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு வருகின்றது

அடுத்தமாதம் செப்டம்பர் நடுப்பகுதியில் 70ஆயிரம் மெற்றிக்தொன் நாட்டரிசியும், அதன் பின்னர் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 70ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்கத்திற்கும், இந்திய தனியார்துறையினருக்குமிடையிலே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஒரு மெற்றிக்தொன் அரிசியை  445டொலருக்கு இந்திய தனியார்துறையினர் வழங்குவதாக அவர் தெரிவித்தார். அத்துடன் 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும், குறித்தளவு அரிசியும் இந்தியாவின் தனியார்துறையிடம் இருந்தே, ஒரு…

Read More