Headlines

“ஏகாதிபத்தியவாதிகள் முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!

மிகவும் சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் கல்வியிலும் ஏனைய முக்கிய துறைகளிலும் உச்ச நிலையில் இருப்பதனாலேயே பலம் பொருந்திய, வளம் நிறைந்த முஸ்லிம் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அல்காசிமி கிராமத்தில் நடைபெற்றுவரும் மக்தப் பிர்தௌஸ் வகுப்பின் இரண்டு வருடப்பூர்த்தி நிகழ்வு, அதிபர் நவாசிர் (ரஷீதி) தலைமையில் இன்று (03/ 12/ 2017) அல் காசிமி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாகப்…

Read More

“ஷில்பசவிய” நிகழ்வு!

கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடு “செமட்ட செவண” வீட்டு உறுதிப் பத்திரம் விசிரி கடன்கள் மற்றும் “ஷில்பசவிய” நன்மைகளை வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு, டேபா மாநாட்டு மண்டபத்தில் நேற்று  (02/12/2017) இடம்பெற்றது. ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி,  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் உதயகுமார், வீடமைப்பு அதிகார சபையின் தலைவர்…

Read More

மண்டாடுகம பாடசாலை மைதானம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதி ஒதுக்கீட்டில், அநுராதபுரம், மண்டாடுகம முஸ்லிம் வித்தியாலய மைதானத்தின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவு  செய்யப்பட்டது. ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மைதானம், இஷாக் ரஹ்மான் எம்.பியினால் மாணவர்களின் பாவனைக்காக   கையளிக்கப்பட்டது.      

Read More

“திருகோணமலையில் 40 வருட பழைமையான குழாய்நீர் இணைப்புக்களே இன்னும் காணப்படுகின்றன” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

பிராந்திய அபிவிருத்தி, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள், மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தின் போது (30/ 11/ 2017)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உரயாற்றினார். அவர் கூறியதாவது, திருகோணமலை மாவட்டம் மற்றும் கிண்ணியா பிரதேச சபை, திருகோணமலை நகர அபிவிருத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் 40 வருட பழைமையான குழாய்நீர் இணைப்புக்களே இருக்கின்றன. இவற்றினால் திருட்டுத்தனமான இணைப்புக்கள் அதிகரித்துள்ளன. இதனை நவீனமயப்படுத்துவதுடன், 455 கிலோமீற்றர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்…

Read More

தேர்தல் முன்னெடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாகடர்.ஹில்மி மஹ்ரூபின் தலைமையில் கிண்ணியா, குட்டியாகுள பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று (01) இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைப்பு சம்பந்தமான  விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் எதிர்வரும் தேர்தலை எவ்வாறு முகம்கொடுப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது இப்பிரதேச வாழ் மக்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டு, தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.  

Read More

‘வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு அழுத்தம்…

வடமாகாண சபையின் வாக்காளர்களாக காணப்படும் சுமார் 50,000   முஸ்லிம்களுக்கான, மாகாண சபை பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை எல்லை நிர்ணயத்திற்கான  ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென, வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் மாந்தை மேற்கு – மடு கிளை வலியுறுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலாளரிடம், வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கையளித்துள்ள முன்மொழிவில் இவ்வாறு சுட்டிக்காட்டப்படுள்ளது. முஸ்லிம் பிரதேச எல்லை நிர்ணயம் சம்பந்தமான இந்த முன்மொழிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை நாட்டில் சிங்கள மக்களுக்கு…

Read More

மன்னார் உப்புக்குளத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க  மன்னார், உப்புக்குளம் கிராமத்திற்கான வீதி விளக்குகள் பொருத்தும் பணி இன்று இடம்பெற்றது. முன்னாள் நகர சபை உறுப்பினர் நஹுசீனின் மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.            

Read More

ரிதீகம வரகாவெஹர மஸ்ஜிதுல் ஹுதா பாதை புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், ரிதீகம, வரகாவெஹர மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் பாதையின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிகுட்பட்ட  ரிதீகம பிரதேசத்திலேயே  இந்த பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், மக்கள் காங்கிரஸின் தொடங்கஸ்லந்த அமைப்பாளர் அஸ்வர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் ஆகியோர்  இன்று (01)  அந்தப்…

Read More

அம்பாறையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு!

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 01.12.17 பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன், ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி,  பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம், அம்பாறை பஸ்  நிலையம் ஆகியன…

Read More

“தெதுறு ஓயா திட்டத்தை” புத்தளம் மாவட்டத்துக்கு விரிவுபடுத்துவதற்காக எமது நன்றிகள்… நவவி எம்.பி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவி (22) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை… குருநாகல் மாவட்டத்திலிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு “தெதுறு ஓயா திட்டத்தை” விரிவுபடுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜித முனி சொய்சாவிற்கு நான் நன்றி கூற வேண்டும். 2016 ஜூலையில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் எமது மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தேங்காய், நெல் மற்றும் முந்திரி போன்ற…

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு கூட்டமைப்பே தடை! அமைச்சர் ரிஷாட்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிப்பதற்காக தான் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென கைத்தொழில், வர்த்தக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (29)  இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு பதிலளித்தார். நல்லாட்சி அரசு அமைந்ததன் பின்னர் வடக்கில் எத்தனை கைத்தொழிற்சாலைகள் அமைத்தீர்கள்…

Read More

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கொழும்பு மாவட்டத்தில்  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின்  பெறுபேற்றை அதிகரிக்கும் வகையில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட பிரத்தியேக வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் கௌரவ அதிதியாகப் பங்கேற்றார். கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில்இ டம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் உட்பட…

Read More