தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part 1
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part 1
தெரண TV இன் 360° நிகழ்ச்சியில் இனவாதிகளுக்கு அமைச்சர் றிசாட் கொடுத்த சாட்டையடி Part 1
வில்பத்து விவகாரம் – பேராசிரியர் நௌபால் விளக்கம்
தங்களது பூர்வீகக் காணியில் குடியேறியுள்ள மக்களை அகற்ற முடியாது. வில்பத்து வனப்பிரதேசம் விஸ்தரிக்கப்படுவதென்றால் அவர்களுக்கு வேறு இடங்களில் காணி வழங்கப்பட வேண்டும் என அனைத்து மதங்களினதும் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூரகல மற்றும் வில்பத்து விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடுவதெனவும் அஸ்கிரிய மற்றும் மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதெனவும் இணக்கம் காணப்பட்டது. நேற்று மதியம் நீதியமைச்சில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஷவின் தலைமையில் அனைத்து மதங்களுக்குமான அமைச்சர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது….
ஆசிய பசுபிக் நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன்நேற்று (செவ்வாய் இரவு)தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். தாய்லாந்தில் இன்று தொடங்கவுள்ள இந்த மாநாட்டில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க குழு கலந்துகொள்ள உள்ள அதேவேளை அங்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு – நேற்று (2017.01.09) வாழைச்சேனை ஹைராத் மீனவ சங்கத்தினர் பாராளுமன்ற கட்டிடற் தொகுதியில் வைத்து கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் கெளரவ மஹிந்த அமரவீர அவர்களை சந்தித்து ஆழ் கடல் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலின் போது பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1.ஆழ்கடல் மீனவர்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட இருக்கும் கடலில் பொருத்தும் கருவிகளை தவிர்த்து, அதற்கு பதிலாக பெறுமதியான…
-நியாஸ் கலந்தர் – வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முக்கிய வகிபாகம் வகித்து இன்று வரை சளைக்காமல் போராடும் முஸ்லிம் அரசியல் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்று பெருமையுடன் கூறமுடியும். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வில்பத்து ஜீவராசி பிரகடனம் முன்மொழியப்பட்டது.இந்த பிரகடனம் மூலம் வடக்கு முஸ்லிம்கள் தங்களது பூர்வீக இடங்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.வடபுல மக்களை மீள் குடியமர்த்த வேண்டும் என இரவு,பகல் பாராது தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்திருக்கும் ஓர் அரசியல் தலைவனாக…
-Junaid M. Fahath – தற்போது இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள வில்பத்து பிரதேசத்தை சார்ந்துள்ள மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் 08.08.1970 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிதைவடைந்து காணப்படுகிறது.. 1970 களில் முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்ததற்கான மிக முக்கிய சான்றுகளாக இவை காணப்படுகிறது.. தற்போது மரங்களாளும் புற் புதர்களாளும் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இவை முழுமையாக மூடப்படுமானால் இவ் சான்று மறைந்து போகும் இதனால் இலங்கை சமூகம் மறந்து போகும்….
வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய்யான கூகுல் வரைபடைத்தைக் காட்டி அங்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகே முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறியுள்ளனர் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, இல்லை, சகோதரரே நீங்கள் சொல்வது தவறு. இன்றைய நிகழ்ச்சிக்காக உங்களுக்கு யாரோ பிழையான தகவல்களை வழங்கியிருக்கிறார்கள் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைதியாக எடுத்துக்கூற, என்ன…
அமைச்சர் றிஷாத் கலந்து கொண்ட TV விவாதம் (வீடியோ)
அஷ்ரப் அவர்களுக்கு தீகவாபி என்றால், அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு மரிச்சுக்கட்டி எனலாம். அன்று TNL சோம ஹிமியை வைத்து அஷ்ரப்புக்கு ஆப்படிக்க நினைத்த போது அவர் காலை வாற ஒரு பௌசி! ஆனால் இன்று ஒட்டுமொத்த மீடியாவும் இனவாதிகளோடு ஓரணியாக திரள, “அண்ணன் எப்ப சாவான்? திண்ண எப்போ காலியாகும்னு ?” ஏங்கும் போராளிகளின் ஓலம் பேஸ்புக்கெங்கிலும் ஈனஸ்வரமாக கேட்கிறது. ஓகே ! நேற்றிரவு நடந்த 360 நிகழ்ச்சியை கொஞ்சம் அலசுவோம்! ‘சங்க’ (සංඛ)என்ற பிறவியால்…
அமைச்சர் றிஷாத் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள் அனைத்திற்கும் எதிராக இனவாதிகளுடன் எவ்வித அச்சமுமின்றி போராடி வருகிறார்.அமைச்சர் றிஷாதிற்கு சிங்களத்தில் அவ்வளவு புலமையில்லை.இருந்தாலும் சிங்கள மக்கள் வில்பத்து விடயத்தில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக சிங்கள நிகழ்ச்சிகளில் எவ்வித அச்சமுமின்றி கலந்து கொண்டுள்ளார். முன்னர் ஹிரு தொலைக்காட்சியிலும் இன்று தெரண தொலைக்காட்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.இவர் குறித்த இரு நிகழச்சிகளிலும் மிகத் தெளிவாக தனது வாதங்களை எடுத்து வைத்திருந்தார்.குறித்த பிரச்சினை எழுந்த நாள் தொடக்கம் இன்று வரை…