Headlines

வில்பத்து அழிக்கப்படுகிறது எனக் கூறி இனவாதத்தை தூண்டுகின்றனர் – வவுனியா தேரர்கள்

வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு, கூமாங்குளம் ஆகிய கிராமங்களுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். வில்பத்து அழிக்கப்படுகிறது எனக் கூறி இனவாதத்தை தூண்டி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவருக்கும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என இந்த பிக்குமார் கூறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச 1980 ஆம் ஆண்டு மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் திறந்து வைத்த வீடமைப்புத் திட்டத்தின் பழைய வீடுகள் சிலவற்றையும் பிக்குமார்…

Read More

கற்பிட்டி மீனவ சங்க உறுப்பினர்களுக்கு உதவி

கற்பிட்டி பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கண்டல்குடா, வன்னிமுந்தால் மற்றும் தில்லையூர் பிரதேச மீனவ சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் தமது பண்முகப்படுத்தப்பட்டு வரவு செலவு திட்ட நிதியிலிருந்து வழங்கி வைத்தார். இந்நிகழ்வு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

Read More

பா.உ. நவவியினால்  புத்தளம் பாடசாலைக்கு பல்ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு 

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு 2017ம் ஆண்டுக்கான ஆறாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.எஸ்.சீ. யாஹ்கூப் (நளீமி) அவர்களின் தலைமையில் அண்மையில்பாடசாலை வாளகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வின் போது அவர்கள் தமது பண்முகப்படுத்தப்பட்டு வரவு செலவு திட்ட நிதியிலிருந்து பாடசாலைக்காக பல்ஊடக உபகரணங்களை (Multimedia…

Read More

சுய தொழில் புரிவோருக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

கைத்தொழில் மற்றும் வர்த்தக ராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாசா அவர்களது அழைப்பை ஏற்று சுய தொழில் புரிவோருக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அண்மையில் அமைச்சர் றிஷாத்  கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் மாகாண, பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

வட்ஸ் அப் ‘வீரர்’களுக்கு சட்டத்தரணி சிராஸ் படிப்பித்த பாடம் !

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு குழுவினருக்கு சரியான பாடம் படிப்பித்திருக்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை கடுமையாக சாடியும் அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வட்ஸ்அப் மூலமாக இட்டுக்கட்டப்பட்ட தகவல் ஒன்று பகிரப்பட்டது. சட்டத்தரணி மைத்திரி குணரத்னவையும் இதில் தவறாக சித்தரித்திருந்துடன் சிராஸ் நூர்தீனின் மர்ஹூமான தந்தையையும் அவமதிக்கும்…

Read More

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு)

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு) தெரண தொலைக்காட்சியின் நேரடி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்றிரவு பங்கேற்கின்றார். வில்பத்து விவகாரம் இலங்கையின் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இன்றைய நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சிங்கள மொழியில் இந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்பது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வு மூலம் சிங்கள மக்களிடத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களை களைவதற்கு ரிசாத் முனைந்துள்ளமைமைய முஸ்லிம் கல்வியலாளர்கள் வரவேற்கின்றனர்.

Read More

ஒரு அகதியின் குரல் அகதிகளுக்காக ஒலித்தது

இப்றாஹிம் மன்சூர் அமைச்சர் ஹக்கீம் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் ஏன் இந்தளவு அசிரத்தையாகவுள்ளார் என்ற சிந்தனை அடிக்கடி மேலெழும்.அதற்கான விடையை நேற்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியை பார்க்கும் போது பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அமைச்சர் றிஷாத் ஒரு அகதி.அந்த அகதிகளுக்கு ஒரு துன்பம் என்றால் அது அமைச்சர் றிஷாதிற்கும் தான் என்ற விடயத்தை அவர் இன்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியில் பார்க்கக் கூடியதாக இருந்தது.அவரது பேச்சுக்களில் தன்னை…

Read More

இனவாதம் இன ஒற்றுமையை வலியுறுத்துகிறதா?

-M.M.A.Samad – இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த – சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனையவர் வந்தேறு குடிகளல்ல. அவர்களும் ஆண்டாண்டு காலமாக இம்மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்;. இத்தேசத்தைக் கௌரவப்படுத்தியவர்கள். அவர்களால் இத்தேசம் மாண்பு பெற்றிருக்கிறது. இதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் சொந்தக்காரர்கள். இந்நாடு அவர்களுக்கும் சொந்தம். அவர்கள் அனைவரும் சகல உரிமைகளும் பெற்று இம்மண்ணில் வாழ்வதற்கு…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அதிரடி; காணமல் போன படகுகள் கண்டுபிடிப்பு

நேற்று [2016/01/05] அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தினர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்தனர். இதன் போது அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த சகோதர்கள் ஆறு பேர் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்று படகுடன் காணமல் போன சம்பவம் சம்பந்தமாக பிரதியமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஆறு நாட்களின்…

Read More

வில்பத்து பிரச்சினை: முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு (வீடியோ)

வில்பத்து தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடுதொடர்பில் கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது. විල්පත්තු ගැටළුවට මුස්ලිම් දේශපාලන නායකයින් එකතුවෙයි පදිංචියට ගියේ කල්ලතෝනියින් නෙවෙයි හදෙන් වැටුණු මිනිස්සු නෙවෙයි නාමල් රාජපක්ෂ වව්නියාවෙ ගස් කපලා නාමල්ගම හැදුවා.

Read More