Headlines

முன்னாள் இராணுவ பேச்சாளரின் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் இராணுவ பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவின் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கையை கோட்டை நீதிமன்றம் இன்று (06) நிராகரித்துள்ளது.

Read More

இப்றாஹீம் அன்சாரின் தொலைபேசியை திருடிச்சென்ற கொள்ளையர் கூட்டம்

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாஹீம் அன்சாரைத் தாக்கிய கொள்ளையர் கூட்டம் அவரது கையடக்கத் தெலைபேசியையும் திருடிச் சென்றுள்ளது. என்பதை நவமணி பத்திரிகையின் ஆசிரியர் என்.எம்.அமீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

மர்­மங்­கள் வெளிவர கனடாவுக்கு போன, தாஜுத்தீனின் படு­கொலை காட்­சிகளில் ஏமாற்றம்

-விடிவெள்ளி MFM.Fazeer- பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்பில் மர்­மங்­களைத் துலக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­பட்டு கன­டா­வுக்கு மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அனுப்­பப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்­சிகள் ஊடாக தெளி­வான எந்த முடி­வுக்கும் வர­மு­டி­யாது என பிரிடிஷ் கொலம்­பியா ஆய்வு நிறு­வனம் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறி­வித்­துள்­ளது. குறித்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் பயணிக்கும் வாகனங்களின் இலக்கங்களையோ அல்லது அதனுள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அல்லது நபர்கள் யார் என்பதையோ தெளிவாகக் கண்டறிய…

Read More

மேஜர் ஜெனரல் குணரத்ன ஓய்வு

மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து -05- நேற்றுடன் ஓய்வுபெற்றார். இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரத்ன 53 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, 2001 ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 523, 551 ஆவது பிரிகேட்களினதும், வான்வழி தாக்குதல் படைப்பிரிவினதும் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர். பின்னர், 55ஆவது, 53ஆவது டிவிசன்களி்ன் கட்டளை அதிகாரியாக இருந்தார். 35 ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய…

Read More

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல்! மலேசிய அரசாங்கம் வருத்தம்!

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது கடந்த 4ஆம் திகதியன்று உயர்ஸ்தானிகர் அன்சார் தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கவலை கொள்வதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர்தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உயர்ஸ்தானிகரத்துடன் இணைந்து உறுதிப்படுத்தவுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்….

Read More

எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை இன்று

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (6) மீண்டும் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 8 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போயிருந்தார். பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி வழங்கிய முறைபாட்டிற்கு அமையவே குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Read More

இளைஞரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது!

மீகஹவத்தை – சியம்பலாபேவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நவகமுவ பகுதியில் வைத்து பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. சியம்பலாபேவத்தை பகுதியில் கடந்த முதலாம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்திகள் நான்கையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்களை இன்று மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

உயர்ஸ்தானிகரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (5) கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த…

Read More

மொசம்பிக் நாட்டின் நட்சத்திர பாடகர், இஸ்லாத்தில் இணைந்தார்

மொசம்பிக் நாட்டின் பிரபல நட்சதிர பாடகர் அர்சீன் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்தனது பெயரையும் யாசீன் என்று மாற்றி கொண்டார் தற்போது ஹஜ் செய்ய வந்திருக்கும் அவர் தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டது பற்றி குறிப்பிடும் போது, தன்னிடம் ஆரம்பத்தில் இஸ்லாத்தை பற்றி நல்ல எண்ணம் இருக்கவில்லை என்பதையும் ஊடகங்கள் சொல்வது போல் இஸ்லாம் தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சித்தந்தம் என்றே தாம் எண்ணியதாக கூறிய அவர் ஒரு நாள் கஃபாவை தனது கனவில்…

Read More

யால தேசிய பூங்காவால் 6000 இலட்சங்கள் வருமானம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை ருஹுனு யால தேசிய பூங்காவின் வருமானம் மாத்திரம் 6000 இலட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிகமான உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால பூங்காவை பார்வையிட வருவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தின் ஒரு நாளில் மாத்திரம் இதன் வருமானம் 45 இலட்சமாக காணப்பட்டதாகவும்,ஏனைய நாட்கள் வழமைப் போலவே 25 இலட்ச வருமானங்களை பெற்றதாகவும் அவர் மேலும்…

Read More

ஐ.தே.க.வுக்கு 70 ஆண்டுகள் பூர்த்தி!

ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. இந்த நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் ஐக்கிய தேசியக் கட்சியானது மிதவாத கொள்கைகளைப் பின் பற்றி பல தடவைகள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பங்காளிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு…

Read More

அன்சார் மீது தாக்குதல் நடத்தியோருக்கு உரிய தண்டனை வழங்குங்கள்

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று மாலை(06/09/2016) மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத் அவர்களை, அமைச்சர் றிசாத் சந்தித்து தனது கடுமையான கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்துவார். மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அங்கு…

Read More