Headlines

நாடகமாடிய வர்த்தகர் கைது

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நஸ்ரின் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்வதற்காக…

Read More

தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைப்பு

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார். அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடு திரும்பமாறு உயர்ஸ்தானிகர் இப்ராஹிமிற்கு வெளிவிவகார அமைச்சு நேற்று (6) அறிவித்துள்ளது. இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ள உயர்ஸ்தானிகரின் பதவி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜதந்திரி ஒருவர் மீது தக்குதல் நடத்துவது பாரதூரமான நிலைமை எனவும் மலேசியாவில்…

Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம்

-சுஐப் எம்.காசிம்    – முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டதாலும், ஆயுதக் கலாசாரத்தின் அட்டூழியங்களைத் தாங்க முடியாததாலுமே, சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் தனிக்கட்சி அமைத்தார். எமக்கென்று ஒரு கட்சி வேண்டும், எமக்கென ஒரு குரல் வேண்டும், எமக்கென்று ஓர் இயக்கம் தேவை என்ற நோக்கிலே மர்ஹூம் அஷ்ரப் இந்தக் கட்சியை ஆரம்பித்து, தைரியமாக முஸ்லிம் சமூகத்தின்  அரசியல் பயணத்தை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்தார். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முகவரியை அவர் பெற்றுத்தந்தார். பேரம்…

Read More

அன்சார் விவகாரம்: பிரதமர் கண்டனம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

கல்குடா சமூகமே உஷார்! ஷீஆக்களின் குர்பான் இறைச்சி!

ஸஹபாக்களை நேசிப்போர் ஒன்றியம் – கல்குடா என்று உரிமை கோறப்பட்டு கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் துன்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சமூகப்பணிகளின் பெயரில் கல்குடா முஸ்லிம்களிடம் இடம் பிடிக்க ஷீஆக்கள் பிரயத்தனம் கல்குடா சமூகமே உஷார்! நமது பிரதேசத்தில் ஷீஆ விஷ விதையை நட்டு, ‘தகிய்யா’ எனும் கபட நாடகத்துக்குள் பச்சோந்திகளாய் நடித்து, தமது வழிகெட்ட கொள்கைகளை பரப்பிவந்த ஷீஆக்கள், இன்று அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜீவமரண போராட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர். ஜம்மியதுல் உலமாவின்…

Read More

‘கட்டுநாயக்கவை கட்டியெழுப்புவோம்’

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நீண்டகாலத் திட்டங்கள், ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். ஆசிய நாடுகளிலுள்ள மோசமான விமான நிலையங்களின் பட்டியலில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம், 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில், அமைச்சரிடம் கேட்ட போதே, அவர்…

Read More

‘ஜனாதிபதியின் உரைக்கு கண்ணீர் சிந்தினர்’

‘சிறிய குடும்பத்திலிருந்து வந்தமையால் தான், என்னை ஓடஓட விரட்ட முயற்சிக்கின்றீர்களா, தூற்றுகின்றீர்களா என்று கேட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போது, பிரதான மேடையில் இருந்த பலர் கண்ணீர் சிந்திவிட்டனர்’ என்று, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘குருநாகலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில்,…

Read More

சு.க மத்தியகுழு வியாழன் கூடும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு, எதிர்வரும் வியாழக்கிழமை கூடவிருப்பதாக, அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. கட்சியை மறுசீரமைத்தல், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதியவர்களுக்கான பொறுப்புகள், கடமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும், ஏனைய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காகவே, மத்தியக் குழு அவரசமாக கூடவிருப்பதாக அறியமுடிகின்றது. இதேவேளை, குருநாகலில் ஞாயிற்றுக்கிழமையன்று கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தலைமையில் நடைபெற்ற  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டுக்கு சமூகமளிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக…

Read More

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்.. . யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் தொழுகை அறை தாக்கப்பட்டமை வருத்தத்துக்குரியது எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் யாழ் பல்கலைக்கழக நிருவாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் கல்விப்பிரிவுப் பணிப்பாளர் டாக்டர். ஷாபி ஸிஹாப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் மீண்டும் துளிர்விட்டு வரும் இனநல்லுறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், இனந்தெரியாதோர்…

Read More

மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

மலேசியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, மலேசிய தமிழர்களால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதுமாத்திரமின்றி மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்…

Read More

பதுளை – கொழும்பு ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பொடிமெனிக்கே ரயில், கொட்டகலை – ஹட்டன் ஆகிய புகையிரத நிலையத்திற்கிடையில் 110 என்ற கட்டைப்பகுதியில் நேற்று 1.45 மணியளவில் தடம்புரண்டுள்ளது. தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

Read More

தரம்குறைந்த தலைக்கவசங்களை அகற்ற நடவடிக்கை

சந்தைகளில் காணப்படும் தரம்குறைந்த தலைக்கவசங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா நியமங்கள் நிறுவனம் அல்லது நுகர்வோர் அதிகார சபையுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More