Headlines

2017ஆம் ஆண்டு தேர்தல் – பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த மாதம் 15ஆம் திகதியுடன் எல்லைநிர்ணயங்கள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017இல் நடைபெறும் என்று இறுதியான முடிவை அறிவித்தார்.

Read More

‘தேர்தல் பிற்போட்டமைக்கு மக்களே பொறுப்பு’

-பாநூ கார்த்திகேசு – ‘தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்’ என, தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ‘தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில்…

Read More

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலேயே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் : ஜனாதிபதி

எதிர்காலத்தில்இடம்பெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள்நேயக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றிபெறச் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நேற்று பிற்பகல் திறந்துவைத்த போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு…

Read More

பல்கலை முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவு!

VTM. IMRATH- பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும் என்ற நீண்டகால வேண்டுகோளின் விளைவாக, ஏற்கனவே பல்கலைக்கழக வளாகங்களில் இயங்கிவரும் முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒன்றிணைத்த ஒரு குடை அமைப்பாக உருவாக்கப்பட்டதுதான் ஒம்சா (AUMSA) எனப்படுகின்ற அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமாகும். 2002 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, சுனாமிக்கு பிற்பட்ட மீள் குடியேற்ற காலத்தில் ஓர் இயங்கும் படையாக உருவெடுத்து, பல்வேறு சமூக நல விடயங்களில் பங்காற்றிவிட்டு காலவேட்டத்தில்…

Read More

தவறான சமிக்ஞையை வழங்கிவிடக்கூடாது!

-நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழுகை அறை மூன்றாவது முறையாக தாக்குதலுக்குள்ளான சம்பவம் இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் இனம்தெரியாத சிலர் தொழுகை அறையை தாக்கி அதற்குள்ளிலிருந்த மின் விசிறிகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்கும் சுமார் 650 முஸ்லிம் மாணவர்களுக்கு ஐவேளை தொழுகையை நிறைவேற்றுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஒதுக்கப்பட்ட பத்து பத்தடியிலான அறையே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் நாட்டுக்கு வழங்கும்…

Read More

கனடாவில் விபத்து – தாயும், மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர்…

Read More

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் கைது

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பே இந்தப் பெண் குழந்தையுடன் இலங்கை வந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் ஊடாக 2000 ரூபாவிற்கு குறித்த குழந்தையைவிற்கும் போதே குறித்த பெண்ணும், முச்சக்கர வண்டி சாரதியும் கட்டுகஸ்தொட்டபொலிஸ் பிரிவில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக…

Read More

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று (6) பிறப்பித்தார். குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமை…

Read More

மிருகக்காட்சி சாலையில் இரு வங்கபுலிகள்

தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகையை சேர்ந்தவை. இந்தப் புலிக்குட்டிகளின் நிறை 109 தொடக்கம் 227 கிலோ கிராம் என தெஹிவளை மிருக்காட்சி சாலையின் கடமை நேர பணிப்பாளர் ஜெனரல் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். காடுகளில் வசிக்கும் போது இவைகளின் ஆயுட்காலம் 15 வருடங்கள் என்பதுடன் மிருகக்காட்சிசாலைகளில் வசிக்கும் போது…

Read More

நாட்டில் நிலவும் நீர் தட்டுப்பாடு!

நாட்டில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை மாற்றங்களினால் நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்மாகாணத்திலேயே இந்த நிலைமை அதிகம் காணப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை புத்தளம், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலவுவதாகவும் இதனால் தென்மாகாணத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கங்கைகளின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேசிய…

Read More