Headlines

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பினால் பதற்றம்

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

 யாழில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கின்றார்.

Read More

வழமைபோன்று செயற்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் எந்தவித இடையூறுகளும் இன்றி இடம்பெறுவதாக விமான நிலைய செயற்பாட்டு அதிகாரி கூறினார். வழமை போன்று நாளாந்த விமான போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார். இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் மேலதிக வேலைகளில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்கள். விமானிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான விசாரணை சாதாரண முறையில் இடம்பெறக் கூடியதல்ல என்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் அமைப்பு கூறியுள்ளது. அவர்களின்…

Read More

விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை விட விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் என குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, ஹிலாரியை விட டொனால்ட் டிரம்புக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும்…

Read More

இஸ்ரேல் பிரதமருக்கு, கைகுலுக்க மறுத்த நெதர்லாந்து MP (வீடியோ)

பாலஸ்தீன் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நெதர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நெதன்யாஹுவுக்கு கை குலுக்கி வரவேற்றனர். அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கை குலுக்க மறுத்துவிட்டார். மேலும் அவரது சட்டையில் பாலஸ்தீன் கொடியையும் பொறுத்திருந்தார். பெஞ்சமின் நெதன்யாஹு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து மக்கள் பாலஸ்தீன கொடியை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Read More

தலையில் துப்பாக்கிச் சூடு பட்டது கூட தெரியாது – துமிந்த சில்வா

எனது தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. நேற்றைய வழக்கு தீர்ப்பின் போது நீதிபதிகளிடம் துமிந்த இதனைத் தெரிவித்திருந்தார். எனக்கு எதுவும் தெரியாது. எனது…

Read More

புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்புக்கு எதிராக குரல் கொடுப்போர் யார்?

புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பிற்கு எதிராக குரல் கொடுப்போர் பற்றி அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரியுள்ளது. புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கோரிக்கை விடுத்துள்ளார். புகையிலை பொருள் அடங்கிய உற்பத்திகளுக்கான வரியை 90 வீதமாக உயர்த்துமாறு சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிவுறுத்தல் இதுவரையில்…

Read More

மத்திய வங்கி விவகாரம்! விசாரணை முடிவு!

மத்திய வங்கி முறிக்கொள்வனவில் முறைகேடு தொடர்பிலான நாடாளுமன்ற கோப் குழுவின்விசாரணைகள் நேற்று (8) முடிவடைந்தன. இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதியன்றுநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Read More

சிறுபோக நெற்செய்கை அறுவடை அமோகம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட 19 சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் பிரதேசத்தில் 550 ஏக்கர் சிறுபோக நெல் பயிரிடப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்துவருவதாக ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் ம.சற்குணநேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுகையில், இத்திமடுக்குளம பெரியகுளம், ஒதியமலைக்குளம், கோடாரி கல்லுக்குளம் ஆகிய குளங்களின் கீழ், 50 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுவதாக தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் பெரிய நீர் பாசனக் குளமாக காணப்படும் முத்து ஜயன்கட்டு குளத்தின்…

Read More

இலங்கையின் பணிகளுக்கு பான் கீ மூன் வரவேற்பு

அமைதிக்காப்பு படை நடவடிக்கைகளில் இலங்கையின் பங்கு குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பை வெளியிட்டுள்ளார். லண்டனில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதிக்காப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மூன் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய நாடுகளின் அமைதிக்காப்பு பணிகளில், பங்களாதேஸ்,பாகிஸ்தான்,இந்தியா,இலங்கை, சீனா ஆகிய நாடுகளின் பங்களிப்பு பெறுமதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மாவடிப்பள்ளி சம்பவத்துக்கும் அமைச்சர் றிஷாத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது

மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவத்தை அமைச்சர் றிசாத்துடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் நசீர், மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் அடுத்தடுத்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாடுகள், அமைச்சர் றிசாத் மீது கொண்ட காழ்ப்புணர்வையும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சி தங்களது கட்சியினதும், தமது எதிர்கால பிரதிநிதித்துவத்தினதும் இருப்புக்கு பாதிப்பை வெளிப்படுத்திவிடுமோ என்ற அச்சத்திலுமே இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்டீன், மக்கள் காங்கிரஸின்…

Read More

வறுமையை ஒழிப்பதற்கு விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்

உலகிலிருந்து வறுமையை ஒழித்து சிறப்பான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு பயன்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயத்தில் விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இந்த மகாநாட்டை நடாத்துவதற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்மைக்கு தான் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த மகாநாட்டில் 23 நாடுகளைச்சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்குகொண்டுள்ளனர். மகாநாடு 3 நாட்களுக்கு நடைபெறும். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று சர்வதேச மகாநாடு…

Read More