Headlines

ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் சனிக்கிழமை (01) காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தபால் ரயிலில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

சார்க் மாநாடு ஒத்திவைப்பு

19ஆவது சார்க் மாநாட்டை தள்ளிவைப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 19ஆவது சார்க் மாநாடு  எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரத்தில் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநாடு இடம்பெறும் திகதி விவரங்கள்  இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலை காரணமாக மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த…

Read More

ஜனாதிபதி யாழ் விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் நீர்வேலி, பொன்செல்வமஹால் அரங்கில் இந்த நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இலங்கை விவசாயிகளுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக இலங்கை விவசாய துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியும் என…

Read More

சிறுவர் தின நிகழ்வுகள்

அனைத்து உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையக பகுதிகளில் பலவேறுப்பட்டசிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் இன்று (1) ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் உள்ள வட்டவளைபெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட டிக்கோயா தோட்டப்பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களை மேற்படி தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், கற்றல் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையிலும் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள மிருககாட்சிசாலை மற்றும் விகாரமாதேவி பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று தாவரங்கள் தொடர்பாகவும், மிருகங்கள்…

Read More

சர்வதேச சிறுவர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. “அழகிய சிறுவர் உலகின் பாதுகாப்பிற்காக முதியோரே கரம் கொடுங்கள்” என்பது இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் பல்வேறு நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். சிறுவர்களுக்கு சமூகத்தில் உரிய பாதுகாப்பை வழங்கி நாட்டைமுன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு சிறந்த இடங்களாக குடும்பம், பாடசாலை,…

Read More

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு உரிமைகள் இல்லை: இத்தாலி எச்சரிக்கை

பொது வாக்கெடுப்பு நடத்தி வெளியேறிய பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து மற்ற நாடுகளை விட அதிக உரிமைகள் எதிர்பார்க்கக் கூடாது என்று பிரிட்டனுக்கு இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக அதிகப்படியான மக்கள் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து முறைப்படி வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read More

பலத்த பாதுகாப்பையும் தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்

வடகொரியாவும், தென்கொரியாவும் தீராப்பகை நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் வெகு அபூர்வ சம்பவமாக, பலத்த பாதுகாப்பு கொண்ட எல்லையை தாண்டி, வடகொரியா வீரர் ஒருவர் தென் கொரியாவுக்குள் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நுழைந்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. அவர் மீது தென் கொரியா வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இல்லை. அவர் எப்படி நுழைந்தார், எதற்காக நுழைந்தார் என்பது குறித்து தென் கொரியாவின் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தென்…

Read More

ரூ.5400 கோடி வருமானம் இழந்த டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கோடீசுவரரான இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். தேர்தலில் போட்டியிடுவதால் கடந்த ஒரு வருடமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதனால் அவர் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் கடந்த ஒரு வருடத்தில் அவரது வருமானம் ரூ.5400 கோடி குறைந்துள்ளது. இத்தகவலை பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் விற்பனைக்காக 28 கட்டிடங்கள் கட்டினார். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் ‘பிசி’…

Read More

உதயங்கவின் சிவப்பு பிடியாணை கோரிக்கை நிராகரிப்பு!

ரஸ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றிடம் இரகசிய பொலிஸார் முன்வைத்த கோரிக்கையானதுநீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு 14 மில்லியன் அமெரிக்க டொலரகளுக்கு மிக் விமானக் கொள்வனவு கொடுக்கல்வாங்கல் தொடர்பாக உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்குமாறு இரகசியப் பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றில் கோரிக்கைவிடுத்தனர். எனினும் நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று இரண்டாவது தடவையாகவும் குறித்தகோரிக்கையினை நிராகரித்துள்ளார். இதேவேளை முன்னாள் ரஸ்யாவிற்கான தூதுவர் குறித்த வழக்கின் குற்றவாளியாக…

Read More

இலங்கையில் 40 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய்!

இலங்­கையில் 20 வய­துக்கு மேற்பட்ட பெண்கள் 40 பேரில்  ஒரு­வ­ருக்கு மார்­பக புற்­றுநோய் ஏற்­படும் அபாயம்  இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ள­தாக புற்­று நோய் சிகிச்சை நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். இந்­நாட்டுப் பெண்­களில் நாளாந்தம் 6 – 7 பெண்கள் மார்பு புற்­றுநோய் கார­ண­மாக சிகிச்­சைக்கு வரு­வ­தா­கவும்   வைத்­திய  நிபு­ணர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர். இதன்­படி  வரு­ட­மொன்­றுக்கு சுமார் 250 பெண்கள் மார்புப் புற்று நோயால் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நாட்டில் புற்­று­நோயால் பாதிக் ­கப்­ப­டு­ப­வர்­களில் 25 சத வீதமானோர் மார்புப் புற்­று­நோயால் பாதிப்படைவ…

Read More

புற்றுநோய்க்கு எதிராக, போராட விரும்புகிறீர்களா..?

இலங்கையின் மிகப்பெரும் அபாயமாக புற்றுநோய் விளங்குகிறது. பிரதான புற்றுநோய் சிகிச்சையளிப்பு வைத்தியசாலையாக மஹரகம விளங்குகிறது. இந்த வைத்தியசாலைக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கிற போதிலும் அது போதுமானதாக இல்லை. இந்த வைத்தியசாலைக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கதீஜா பௌண்டேசனும், அதன் நிறுவனர் மொஹமட் ஹாஜியும், அதன் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இலங்கையர்களிடையே 252 மில்லியன் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். அந்த நிதியில் நவீன பெட் ஸ்கேன் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இன்னும் பலபல…

Read More

இலங்கை – சீனா உறவு பலப்படுத்தப்படும் – ஜனாதிபதி

இலங்கை மற்றும் சீனாவுடனான நட்பை நாளுக்கு நாள் பலப்படுத்தி முன்னோக்கிசெல்வதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். 67வது சீன தேசிய தினம் மற்றும் சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வதுஆண்டுநிறைவு விசேட நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்துள்ளார். மேலும் அபிவிருத்தி, முதலீட்டுத்துறை மற்றும் சர்வதேச மட்டத்திலும் சீனாமற்றும் இலங்கையின் உறவு உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். சீன அரசானது இலங்கையுடன் எப்போதும் நல்லுறவைப் பேணி வரும் அரசு என்றும்ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கல்வித்துறை, வீதி…

Read More