நிசங்க சேனாதிபதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி செலுத்தி வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று கொழும்பு பிலிப் குணவர்தன பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு ஆதரவு வழங்குவதற்காக காரில் சென்ற பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியின் வாகனத்திலேயே, 100கிலோ மீற்றர் வேகத்தில் வந்த பொலிஸ் அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. குறித்தப் பெண் தனது வாகனத்தை நிறுத்தி வைப்பதற்காக சினமன்…
ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமிராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிரும் சுழலக்கூடிய இந்த கேமிரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-பை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமிராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக…
விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் நேதாஜியின் பயணம் பற்றிய ரகசிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை…
மனித உரிமை மீறல் தொடர்பில் சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரமான நடவடிக்கைகளில் ஈடுபடாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தெ ஹிந்துவுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது இல்லத்தில் வைத்து ஹிந்துவுக்கு செவ்வியளித்த அவர், முதலில் போரில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் பின்னரே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்….
சிங்க லே இயக்கம், பொது பல சேனாவை போன்று செயற்படாது ஸ்ரீலங்காவின் இயக்கமாக செயற்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். தமது முகநூலில் இந்த கருத்தை அவர் பதிவுசெய்துள்ளார். நுகேகொடையில் முஸ்லிம் வீடுகளின் வாயிற்கதவுகளில் சிங்க லே என்ற சொல் நேற்று முன்தினம் எழுதப்பட்டிருந்தது. இது இனவாதத்தை தூண்டும் என்று செயல் என்று பலரும் விமர்சனம் செய்த நிலையிலேயே ரோஹித ராஜபக்ச தமது கருத்தை பதிவுசெய்துள்ளார். சிங்க…
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஹிருணிகாவை கைது செய்ய வேண்டிய தேவை குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை. பொலிஸார் முழு அளவிலான சுயாதீனத்தன்மையுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவார்கள்…
இலங்கையில் பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான தினங்களில் ஒன்றாக கருதப்படும் வெசாக் பௌர்ணமி தினம், சர்வதேச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் விடுமுறை தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் விடுமுறை தினமாக ஏற்றுக்கொள்ளபபட்டுள்ளது. அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 193 உறுப்பு நாடுகளும் கூடிய போது, வெசாக் பௌர்ணமி தினத்தை விடுமுறையாக அறிவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தீபாவளி பண்டிகை, பெரிய…
– இக்பால் அலி – 2015 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூhயில் ஆங்கில மொழியில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்றமாணவன் பழீல் முஹமட் ஆகீல் முஹமட் ஆகில் இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளர். இன்று வெளியான 2015 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர் தரப் பரீட்சை பெறு பேற்று அடிப்படையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூhயில் ஆங்கில மொழியில்…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அ.இ.ம.க வின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற குருநாகல் மல்லியதேவ ஆண்கள் பாடசாலை மாணவன் முஹம்மத் அகீல் மற்றும் முசலி பிரதேசத்தின் கல்வி வரலாற்றில் முதன் முறையாக (3A) சித்திகளையும் அதிகூடிய z புள்ளியையும் பெற்று சாதனை படைத்துள்ள கலைப்பிரிவு மாணவி றிஸ்வினா…
இந்திய-மியன்மர் எல்லையை மையமாக கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மேற்கு வங்கம், நாகலாந்து, மணிப்பூர், உட்பட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால், மணிப்பூர்…
போரின் பின்னரும் 6 வருடங்களாக தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழும் சுமார் ஒரு லட்சம் பேர் 6 மாதங்களுக்குள் சொந்த இடங்களில் வீடுகள் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்படுவர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார். ஏஎப்பி செய்திச்சேவைக்கு நேற்று வழங்கிய செவ்வியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த உறுதிமொழியை அவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்தோர் முகாமில் வைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.. உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளவர்களை மீண்டும்…