Headlines

பயாகலைப் பகுதியில் நடந்த சம்பவம் : மக்களே எச்சரிக்கை.!

பயாகலை  முதல் மக்கொனை வரையான கடல் எல்லையில் கடல் அலையின் வேகம் அதிகரித்திருப்பதனால் இப்பகுதியில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பயாகலைப் பொலிஸார் பொது மக்களைக் கேட்டுள்ளனர். கடந்த 22 ஆம் திகதிக்குப் பின்னர் இப்பகுதி கடலில் நீராடிய  இரு இளைஞர்கள் மக்கொனை, பயாகலைப்  பகுதிகளில் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். தென்பகுதிக்கு சுற்றுலா செல்வோர் கடலில் நீராடும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுள்ளனர்.

Read More

மாணிக்கக்கல் அகழ்வு : 7 பேர் கைது.!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியில் நேற்று இரவு சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரை ஹட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Read More

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த பொது எதிரணியினர் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை கையளித்தனர்.

Read More

ஜோனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

காணி, சுற்றுலாவளத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Read More

75 இலட்சம் ரூபா நாணயத்தாள்களுடன் இந்திய பிரஜை கைது

75 இலட்சம் ரூபா இலங்கை நாணயத் தாள்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில்  சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய், சார்ஜாவிற்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 44 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்ப நிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் கர்ப்பிணிகள் 4 மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே, அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை…

Read More

மைத்திரி சிங்­கள மக்­களை கவ­னிப்­ப­தில்லை.!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தமிழ் உற­வி­னர்­களை பார்க்க மாதம் ஒரு­முறை யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கவ­னிப்பும் அமோ­க­மா­க­வுள்­ளது. ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்­கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்­கறை கொள்­ளா­தி­ருக்­கின்­றா­ரென பொது பல சேனா அமை ப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்….

Read More

கிருளப்பனையில் தீ விபத்து

கிருளப்பனையிலுள்ள கடையொன்றில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், பிரதேச மக்கள் மற்றும் கிருளப்பனை பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Read More

மார்ச் 23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!

2016 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எதிர்வரும் முதல் 23ஆம் திகதி மாலை 3.09 மணி முதல் 7.24 வரை தோன்றுமென கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சன்தன ஜயரட்ண தெரிவிக்கின்றார். இந்த சந்திர கிரகணம் கிழக்கு வானில் தெரியும். இது நிழல் சந்திர கிரகணம் என்பதால் சந்திரனின் ஒளிமங்கலாகத்தெரியும். இவ்வருடத்தில் மற்றுமொரு சத்திர கிரகணம் எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி நள்ளிரவு நிகழுமெனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

Read More

படுகாயமடைந்த மௌலவி பலி

காத்தான்குடி பிராதன வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் மௌலவி ஒருவர் பலியாகியுள்ளார். இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மிக வேகமாக ஆரையம்பதியிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடு வீதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் பலத்த காயாங்களுடன் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபின்னர் மரணமானார். இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த…

Read More

அதிக வேகத்தினால் ஏற்பட்ட விணை

மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடி ஜூஸ்லா பாமசிக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணித்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயது அபுல் ஹசன் முஹம்மட் ஒஸாமா மரணமடைந்துள்ளார்.

Read More