Headlines

முஸ்லிம் சமுகத்தின் மீது, வேண்டுமென்றே பழி சுமத்துகின்றனர் – றிஷாத்

-சுஐப் எம். காசிம்- பிற சமூகத்தவருடன் முஸ்லிம் சமூகம் இணைந்து வாழவும் பிணைந்து வாழவும் எப்போதும் முயற்சித்து வருகின்ற போதும் எம்மைத் தீண்டாதவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் வேற்றுக்கண்ணோடு பார்க்கும் நிலையே இன்னும் இருக்கின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கலாபூசணம் எம். இஸட் அஹ்மத்; முனவ்வர் எழுதிய இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நூல் வெளியீட்டு விழாவும் முஸ்லிம் சேவைக்குப் பணியாற்றிய உலமாக்கள் கௌரவிப்பு விழாவும் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம…

Read More

பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ள ஜப்பான் மன்னர்

உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முடிந்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் மக்களாட்சி நடைபெறத் தொடங்கி பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும் தங்களை ஆண்ட மன்னர்கள் மீது குடிமக்கள் பற்றும் பாசமும் வைத்திருக்கின்றனர். குறிப்பாக நிர்வாக பொறுப்பில் இல்லாதபோதிலும், பிரிட்டனில் மன்னர் குடும்பத்தினர், அந்நாட்டு அரசியலிலும், மக்கள் மனங்களிலும் முக்கியத்துவம் மிகுந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அதேபோல், ஜப்பான் நாட்டிலும் மன்னர் குடும்பத்தினர் மீது மக்கள் மிகுந்த மரியாதைக் கொண்டுள்ளனர். இந்நிலையில், 82 வயதான ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ, தனது அரியணையில் இருந்து…

Read More

கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் யோஷித்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு 7 கறுவாத் தோட்ட பொலிஸாரே யோஷித்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ரக்பி போட்டி ஒன்றின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். யோஷித்த ராஜபக்ச அங்கம் வகிக்கும் விளையாட்டு கழகத்திற்கும் கண்டி விளையாட்டு கழகத்திற்கும் இடையில் ஸ்ரீலங்கா சூப்பர் செவன் ரக்பி போட்டியின் போது இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது.

Read More

உயர் தரப் பரீட்சை குறித்து 40 முறைப்பாடுகள் : விசாரணைகள் ஆரம்பம்

க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பில் இதுவரை 40 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சையின்போது மோசடியில் ஈடுப்பட்ட மாணவர்கள் தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Read More

மைத்­தி­ரி நாளை காலிக்கு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை காலிக்கு விஜயம் செய்­கிறார். காலி மழ்­ஹருஸ் ஸுல்­ஹியா மத்­திய கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள தொழில்­நுட்ப கூட திறப்பு விழாவில் ஜனா­தி­பதி பங்­கு­பற்­றுவார். காலை 10.00 மணிக்கு வைபவம் இடம்­பெறும். அமைச்­சர்­க­ளான அகில விராஜ் காரி­ய­வசம், வஜிர அபே­வர்­தன, பிர­தி­ய­மைச்சர் மனுச நாண­யக்­கார உட்­பட பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்கள் விழாவில் பங்­கு­பற்­றுவர். பாட­சாலை மாண­வர்­களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

Read More

காஷ்மீர் பிரச்சினையை மோடி கண்டுகொள்ளவில்லை: உமர் அப்துல்லாஹ்

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டர் வலைதளத்தில் எழுதியிருப்பதாவது:- காஷ்மீரில் தொடர்ந்து நிலமை மோசமாகி வருகிறது. ஆனால் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அவர்களாக கற்பனை செய்து கொண்டு இப்படி கூறுகிறார்கள். இங்கு என்ன நடந்து கொண்டு இருப்பதை, பாரதீய ஜனதாவும், இங்கு அவர்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியும் உணர்ந்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு மட்டும்தான் இங்கு அமைதி நிலவுகிறது…

Read More

ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள். இதன் 71–வது ஆண்டு நினைவுதினம் இன்று (6–ந்தேதி) முதல் 9–ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசிய இடங்களில், இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய நேரமான காலை 8.15 மணிக்கு அமைதி மணி ஒலிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று அணுகுண்டு தாக்குதலில்…

Read More

வழமைக்கு திரும்பியது தர்ஹா நகர்

தர்ஹா நகரில் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வழமையாக நிலைக்கு திரும்பியுள்ளது. தர்ஹா நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டிருந்தனர். தர்ஹா நகருக்குச் சென்ற டெங்கு ஒழிப்பு பிரிவினர், டெங்கு நுளம்புகளை அழிப்பதற்காக புகை விசிறியுள்ளனர். அதன்போது, அவர்கள் விசிறிய புகை அங்கிருந்த கடையிலுள்ள பொருட்களின் மீது பட்டதாகக் கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். பின்னர், பொது சுகாதார பரிசோதகர் மற்றும் புகை விசிறிய தொழிலாளி ஆகியோரை கடைக்குள்…

Read More

கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் விரைவு

ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ பள்ளியில் பள்ளிவாசல் தலைவர் மற்றும் தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் றிசாத் பதியுதீன் பலமுறை தன்னை சந்தித்துப் பேச்சு நடத்தியதாகவும், இந்தக் கடலரிப்புப் பிரதேசத்துக்கு தற்காலிக பாதுகாப்புச் சுவர் ஒன்றை அவசரமாக அமைக்கும் நோக்கிலேயே…

Read More

கல்லிசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோஹன் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இன்று  (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்று, அவர்களை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் தொடர்ந்து 11 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை வருகிறார்

-லியோ நிரோஷதர்ஷன் – அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின்  பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.

Read More