Headlines

நிர்க்கதியான இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்

நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து படகில் எற்பட்ட இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான 3 இந்திய மீனவர்களை மீட்டு இந்திய கடலோர காவற்படையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு இந்திய கடலோர காவற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலத்திரனியல் கோளாறு காரணமாக நிர்க்கதியான குறித்த மீனவர்களை மீட்டதுடன், குறித்த தகவலை இந்திய கடலோர காவற்படையினரிடம் அறிவித்து, குறித்த மீனவர்களையும் அவர்களுடைய படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைத்தள்ளனர்.

Read More

ரியோ 2016 ஒலிம்பிக் விழா இன்று ஆரம்பம்

சர்­வ­தேச விளை­யாட்டு அரங்கில் உய­ரி­யதும் உன்­னதம் வாய்ந்­த­து­மான கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் 31 ஆவது அத்­தி­யாயம் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் கோலா­கல ஆரம்ப வைப­வத்­துடன் இன்று தொடங்­கு­கின்­றது. நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை லீப் வரு­டத்தில் நடை­பெறும் நவீன கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா, அதன் 120 வருட வர­லாற்றில் தென் அமெ­ரிக்க நாடொன்றில் அரங்­கேற்­றப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். ஒற்­றுமை, நட்­பு­றவு, சகோ­த­ரத்­துவம், புரிந்­து­ணர்வு ஆகி­ய­வற்றின் சின்­ன­மாக ஒலிம்பிக் விளை­யாட்டு…

Read More

தம்புள்ள பள்ளிக்கு காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம்

தம்­புள்ள ஜும்மா பள்ளியை நிர்­மா­ணிக்கும் காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தயக்கம் காட்டிவருவதாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஏ.எச்.எம்.இப்­றாஹிம் சுட்டிக்காட்டியுள்ளார். தம்­புள்ள பிர­தேச அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம், தம்­புள்ள தொகுதி அமைப்­பா­ளரும் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ப்ரியான் விஜே­ரத்ன தலை­மையில் நடை­பெற்ற போது தம்­புள்ள நகரில் முஸ்லிம் ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிப்­ப­தற்­கென இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் தொடர்ந்தும் கால­தா­மதம் செய்து வரு­வது தொடர்பில் மத்­திய…

Read More

காஷ்மீர் உயர்நீதிமன்றம் ராணுவத்திற்கு எச்சரிக்கை !

– அபூஷேக் முஹம்மத்- காஷ்மீர் உயர் நீதிமன்றம் CRPF மற்றும் ராணுவத்திடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தலைமை நீதிபதி பவுல் வசந்தகுமார் மற்றும் நீதிபதி ஹுசைன் அக்தர் அடங்கிய பென்ச் இந்த வழக்கை விசாரிக்கின்றது . ஏன் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் முட்டிக்கு மேல் மற்றும் கண் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளது நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர் ? அவர்கள் நமது குடிமக்கள் ஆவர் .பெல்லட்களால் சுடுவதற்கு வானத்தில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் அல்ல .அவர்களை…

Read More

தென்கொரியா சென்றடைந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தென் கொரியாவிற்கு இன்று (5) அதிகாலை 1.30 மணியளவில் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் கொரியாவிற்கு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் தென் கொரியாவில் இடம் பெற உள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காகவும்அங்கு வாழ்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்காகவும் தென் கொரியாவிற்கு விஜயம்மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜ.எல்.பீரிஸ்,மகிந்தானந்த அலுத்கமகே,பந்துல்ல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் மகிந்தவுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

ஒலிம்பிக் கிராமத்தில் கைவரிசை: டென்மார்க் வீரர்களின் பொருட்கள் திருட்டு

ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகி ஒருவரின் லேப்-டாப் மற்றும் வீரர்களின் சீருடைகள் சில தினங்களுக்கு முன்பு மாயமானது. இந்த நிலையில் டென்மார்க் அணியை சேர்ந்த வீரர்களின் செல்போன், ஐபேர்டு மற்றும் துணிகள் திருட்டு போய் இருக்கிறது. இதனை டென்மார்க் அணியின் தலைமை நிர்வாகி மொர்டென் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களின் உடமைக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

இந்திய – இலங்கை பாலம் அமைக்கப்பட்டால் அதனை தகர்ப்பேன் : கம்­மன்­பில

இந்­தியா – இலங்­கைக்கு இடையில் பாலம் அமைக்­கப்­பட்டால் அது வடக்கு, கிழக்­கையும் இந்­தி­யா­வையும் இணைப்­ப­தாக அமையும். எனவே இந்­தியா- இலங்­கைக்கு இடையில் பாலம் ஒன்றை அமைத்தால் அதனை தகர்ப்பேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான ஹெல உறும­யவின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்­தார். கொழும்பு பாகொ­டையில் அமைந்­துள்ள தூய்­மை­யான நாளைக்­கான அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் கூறு­கையில், ஆசிய அபி­வி­ருத்­தியின் உத­வியில் இலங்கை–இந்­தி­யாவை நிரந்­த­ர­மாக இணைக்கும் ஹனுமான்…

Read More

பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான்

வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று (5) முதல் கட­மைக்குத் திரும்ப வேண்டும் என அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இன்று பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்­பிட்­டுள்ளார். பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பா­டு­களால் தமது தொழிற்­சங்க நட­வ­டிக்­கையை நிறுத்தப் போவ­தில்லை என, பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க…

Read More

எவ்வித அச்சம், சந்தேகமுமின்றி யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கலாம்

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் பாது­காப்பு முழு­மை­யாக உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே எவ்­வித அச்­சமும் சந்­தே­க­மு மின்றி சுதந்­தி­ர­மாக கல்வி நட­வ­டிக்­கை­க ளில் ஈடு­ப­டு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை விடுத்­துள்ளார். யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர், விரி­வு­ரை­யா­ளர்கள் மற்றும் பெற்­றோர்கள் நேற்று பிற்­பகல் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அண்­மையில் யாழ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற மோதல் சம்­பவம் மற்றும் மாண­வர்­களின் பாது­காப்­புக்­காக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக இந்த சந்­திப்­பின்­போது விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இங்கு கருத்துத்…

Read More

அமைச்சர் றிஷாத் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வைப் பெற்றுத்தர துறைமுக அதிகார சபை நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் – ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார…

Read More

மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்: ஜெயலலிதா

தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அ.தி.மு.க. தான் அதிக அக்கறை கொண்டுள்ளது. 1971-ல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். 2007-ல் அவர் முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது என்றார். இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் பேச்சுக்கு பதில் தர…

Read More