Headlines

வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை கிழக்கு பாடசாலைகளுக்கு இடம்மாற்ற நடவடிக்கை!

வடக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளகிழக்கு மாகாணத்தை சேர்ந்த கல்விக் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் அனைவரையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றி நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இணக்கம் தெரிவித்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை தேசிய கல்விக் கல்லூரிகளில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கானஆசிரியர் நியமனத்தின்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு…

Read More

மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு

விவசாய நடவடிக்கைகளுக்கான  செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணமாக 300 ரூபா அறவிடப்படவுள்ளது. இதேவேளை விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய மின் மீட்டர் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலைதீவு

சார்க் நாடுகள் அமைப்பின் 19வது உச்சி மாநாட்டை புறகணிப்பதாக மாலைதீவு அறிவித்துள்ளது. காஷ்மீரில் உரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிட்டது. இந்த நிலையில், தற்போது 5 வது நாடாக மாலைதீவும் சார்க் மாநாட்டை புறக்கணித்தது. அந்த நாடு சார்பில் சர்வதேச பயங்கரவாதத்துக்கு மாலைத்தீவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது….

Read More

இந்திய தேசத்துக்கு நாங்கள் துணை நிற்போம் – அஸாதுதீன் ஒவைஸி

பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவரும் பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ராணுவத்தினருக்கும், தேசத்துக்கும் துணை நிற்போம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைஸி தெரிவித்தார். இதுகுறித்து ஹைதாராபாதில் செய்தியாளர்களிடம் அவர், வியாழக்கிழமை கூறியதாவது:பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எங்கள் கட்சி எதிர்க்கும். இந்திய ராணுவத்துக்கும், தேசத்துக்கும் நாங்கள் துணை நிற்போம் என்றார் அவர்.

Read More

ஆனமடுவ – மதவாக்குளம் முஸ்லிம்களின் சிறந்த முன்மாதிரி

அண்மையில் இலங்கையிலுள்ள ஆனமடுவ, மதவாக்குளம் என்ற ஊருக்கு குத்பா மற்றும் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தோம் அல் ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் உதவியால் இலங்கையின் பல பாகங்களுக்கும் அவனது மேலான மார்க்கத்தை எத்திவைப்பதற்காக செல்லக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் தந்து கொண்டே இருக்கிறான், எல்லாப் புகழ்களும் அந்த ரஹ்மானுக்கே உரித்தாகட்டும். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை தேடிப்பார்ப்பதில் அலாதியானதொரு இன்பம் நமக்கு, அந்த வகையில் குத்பா நிகழ்த்திய மதவாக்குளம் ஜுமுஆ பள்ளிவாசலுக்கு சுமார்…

Read More

இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய சாதனை படைத்த கோத்தபாய

இலங்கை வரலாற்றில் என்றுமே இடம்பெறாத புதிய சாதனை ஒன்று கோத்தபாய ராஜபக்சவினால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அண்மையில் எவன்காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கின் போது கோத்தபாயவின் சார்பில் 60 வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவருக்காக அதிக வழக்கறிஞர்கள் ஒரே தடவை நீதிமன்றத்திற்கு வருகை தந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கோத்தபாயவினால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் பாதுகாப்பு…

Read More

அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் றிஷாத் இறுதி மரியாதை

அகால மரணமான வட மாகாணசபை பிரதித் தவிசாளர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் ரிஷாட் இறுதி மரியாதை செலுத்தினார்.

Read More

அண்ணன் ஜெகநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

-அமைச்சரின் ஊடகப்பிரிவு  – தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாலமாகத் திகழ்ந்த வடமாகாண சபை பிரதித் தவிசாளர் அண்ணன் அன்டனி ஜெகநாதனின் அகால மரணம், தனக்கு அதிர்ச்சியையும், ஆறாத துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் கூறியதாவது, அண்ணன் அன்டனி ஜெகநாதன் 1972 ஆம் ஆண்டளவில் ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்டார். அதன் பின்னர் அதிபராகவும், கோட்டக் கல்விப்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

சிறுவர்களை நாளைய சொத்துக்களாகக் கருதி, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 1979 முதல் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு, வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே,சிறுவர்களது எதிர்காலம் மற்றும் அவர்களது உரிமைகளை வலியுறுத்துவது தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும், குடும்பத்தவர்களும், பொதுமக்களும் சிறுவர்களது…

Read More

இலங்கையில் அடுத்த வருடம் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராலயம்

இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராலயம் அடுத்த வருடம் இலங்கையில் அமைக்கப்பட உள்ளதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணிலை சந்தித்த நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஸ்டீவன் ஜொய்ஸ், வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே மற்றும் முதன்மை தொழிற்துறை அமைச்சர் நாதன் கய் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கல்வித்துறை அதாவது…

Read More

மாணவனை தாக்கிய தந்தையை தேடி பொலிஸ் வலை வீச்சு

பாடசாலை ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மாணவன் ஒருவன் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாத்தாண்டிய, கொட்டரமுல்ல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் தரம் 05ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான குறித்த மாணவன் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். நேற்று குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இதில் ஒரு மாணவனுடைய சகோதரி, ஆசிரியை ஒருவருடைய தொலைபேசியை எடுத்து…

Read More

துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 28ஆம் திகதி திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெய மேலும் தெரிவித்துள்ளார்.

Read More